ஐஸ்வர்யா அதற்காக என்னை கரம்பிடிக்கவில்லை – அபிஷேக்
தான் ஒரு நடிகர் என்பதாலோ அல்லது மிக பெரிய நடிகரின் மகன் என்பதாலோ, முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தன்னைத் திருமணம் செய்து கொள்ளவில்லை என தங்களது திருமணம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிவித்துள்ளார் நடிகர் அபிசேக் பச்சன்.
ஹிந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிசேக் பச்சனுக்கும், முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
தற்போது அத்தம்பதியினருக்கு இரண்டரை வயதில் ஆரத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று முந்தினம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அபிஷேக்பச்சன், தன் காதல் மனைவி ஐஸ்வர்யா ராய் பற்றிக் கூறியதாவது:-
என்னை பொறுத்தவரை ஐஸ்வர்யா ராய் தான் இந்த பூமியில் மிகவும் அழகான பெண். நான் தினமும் என் முகத்தை பார்த்த கண்ணாடியில் பார்க்கும்போது ஒருவித அச்ச உணர்வு ஏற்படும்.
காரணம் என் முகம் மிகவும் கொடூரமாக இருக்கும். எனவே நான் அவருடன் போட்டியிட விரும்பவில்லை. அது என்னால் முடியாத விஷயமும் கூட.
நாங்கள் இருவரும் அழகினால் இணைந்தவர்கள் கிடையாது. ஐஸ்வர்யா ராய் மிகவும் அழகான பெண். சாதாரண மக்கள் அவரை பார்ப்பது அரிது.
நான் ஒரு நடிகர் என்பதாலோ, அல்லது மிக பெரிய நடிகரின் மகன் என்பதாலோ அவர் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை.
அதேபோல், நானும், அவர் ஒரு உலக அழகி என்பதால் அவரை திருமணம் செய்துகொள்ளவில்லை´ என இவ்வாறு தங்கள் காதல் வாழ்க்கைக் குறித்து அபிசேக் பச்சன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment