Search This Blog

Saturday, 24 August 2013

50 நாட்களை தாண்டியது சிங்கம்-2!!1

50 நாட்களை தாண்டியது சிங்கம்-2!!1

ஹரி இயக்கத்தில், சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடித்த சிங்கம்-2 தமிழ்நாட்டில் 50 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் 10 தியேட்டர்களில் தொடர்ச்சியாக 50 நாட்களை தாண்டியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 30 தியேட்டர்களில் 50 வது நாளை எட்டியிருக்கிறது.

படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், மினிமம் கியாரண்டிக்கு வாங்கிய தியேட்டர்காரர்கள் அனைவரும் லாபம் ஈட்டியுள்ளனர். செகண்ட் ஷிப்டிங்காக 100 தியேட்டர்களுக்கு மேல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு படத்தின் இரண்டாம் பாகம் இத்தனை வெற்றியை பெற்றிருப்பது இப்போதுதான் என்று தியேட்டர் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் எப்போதும் போலீஸ் கதைக்கு தனி மரியாதை இருக்கும். அந்த மரியாதையும் விறுவிறுப்பு குறையாத படத்தின் வேகமும்தான் வெற்றிக்கு காரணம் என்கிறார்கள். சென்னையில் ஒன்றிரண்டு தியேட்டர்களிலாவது 100 நாட்கள் ஓடும் என்கிறார்கள். அடுத்தும் சிங்கம்-3யை ஹரி இயக்குவார் என்று எதிர்பார்த்தார்கள். ஹரி தெலுங்குப் படத்திற்கு சென்று விட்டார், சூர்யா லிங்குசாமி படத்துக்கு சென்று விட்டார்.

No comments:

Post a Comment