பாராட்டு மழையில் விஜய்
விஜய்யின் நடனத்தைப் பார்த்து பிரமித்து போயுள்ளாராம் பிரிட்டிஷ் மொடல் அழகி.
பொங்கலுக்கு ரிலீசாகவிருக்கும் விஜய்யின் ஜில்லா படத்திற்காக விஜய்யும் – பிரிட்டிஷ் மொடல் அழகி ஸ்கேர்லட் வில்சனும் இணைந்து ஆட்டம் போட்டிருக்கும் பாடல் ஒன்றை படமாக்கியிருக்கிறார்கள்.
நடனத்தில் தூள் கிளப்பும் விஜய்யுடன் நடனம் ஆடியிருப்பது குறித்து ஸ்கேர்லட் தனது மைக்ரோ ப்ளாகில், ‘‘விஜய் இஸ் கிரேட் டான்சர்’ அவருடன் ஆடிய டான்ஸை நீங்கல்லாம் ரொம்பவும் என்ஜாய் பண்ணுவீங்கன்னு நம்பறேன்.
சென்னை எனக்கு நிறைய அன்பை தந்தது. அதை மறக்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஜில்லா பொங்கல் ஜல்லிக்கட்டில் களமிறங்க ரெடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment