Search This Blog

Friday, 16 August 2013

டைரக்டர் சேரன் மகள் மனம் மாறுவாரா?

டைரக்டர் சேரன் மகள் மனம் மாறுவாரா?

காதல் விவகாரத்தில் டைரக்டர் சேரன் மகள் தாமினிக்கு மனமாற்றம் ஏற்படுமா? என பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் திடீரென போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தாமினி ஆஜராகி உதவி இயக்குனர் சந்துருவை காதலிப்பதாகவும் இதனால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சேரன் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று விளக்கம் அளித்தார். சந்துருவையும் வரவழைத்து விசாரித்தனர். சந்துருவுக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என்றும் ஏமாற்றப்பட்ட பெண்கள் அவருக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளனர் என்றும் சேரன் குற்றம் சாட்டினார்.

தனது மூத்த மகளுக்கும் பேஸ்புக்கில் ஐலவ்யூ சொன்னார் என்றும் கூறினார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோர்ட்டுக்கு இவ்வழக்கு சென்றதால் கடந்த 6–ந்தேதி இரு தரப்பினரையும் அழைத்து நீதிபதி விசாரித்தார். பின்னர் தாமினி படித்த பள்ளிக்கூடத்தின் தாளாளர் வீட்டில் அவர் தங்கி இருக்க வேண்டும் என்றும் வருகிற 21–ந்தேதி மீண்டும் தாமினியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தர விட்டார்.

இதற்கிடையில் சந்துரு மீதும் அவர் அக்காள் பத்மா மீதும் டைரக்டர் அமீர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். பத்மா ஏற்கனவே ஒரு வரை திருமணம் செய்தவர் என்றும் சந்துரு பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிப்பவர் என்றும் குற்றம் சாட்டினார். சேரன் மீண்டும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று சந்துருவுக்கு எதிரான ஆதாரங்களை கொடுத்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாமினிக்கும் படிப்பு முக்கியம் என்றும் படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து கொள் என்றும் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. தாமினியிடம் மனமாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கின்றனர். அவர் என்ன முடிவு எடுத்துள்ளார் என்பது 21–ந்தேதி கோர்ட்டு விசாரணையில் தெரிய வரும்.

No comments:

Post a Comment