Search This Blog

Sunday, 25 May 2014

வீர மரணம் அடைந்த முகுந்த் வீட்டுக்கு சென்ற விஜய்

வீர மரணம் அடைந்த முகுந்த் வீட்டுக்கு சென்ற விஜய்

சென்னை: தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வீட்டுக்கு நடிகர் விஜய் சென்று அவரது குடும்பத்தாருடன் நேரம் செலவிட்டார்.
கடந்த மாதம் 25ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வீர மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இளையதளபதி விஜய் முகுந்த் வீட்டுக்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அங்கு அவர் முகுந்தின் மகளுடன் இரண்டு மணிநேரம் செலவிட்டார். தந்தையை பறிகொடுத்துவிட்டு நிற்கும் சிறுமியுடன் விளையாடி மகிழ்ந்தார்.
சிறுமியின் முகத்தில் சிரிப்பை வரவழைத்த விஜய் அவளின் எதிர்கால ஆசையை கேட்டறிந்தார். மேலும் முகுந்தின் குடும்பத்தாருக்கு உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
விஜய் மடியில் முகுந்தின் மகள் அமர்ந்து புன்னகை சிந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

Friday, 25 April 2014

வாய்ப்பு கேட்டு ஹீரோக்களுக்கு தூது விடும் நடிகை

வாய்ப்பு கேட்டு ஹீரோக்களுக்கு தூது விடும் நடிகை

சென்னை: பையா நாயகி பட வாய்ப்புகளை பெற ஹீரோக்களுக்கு தூதுவிட்டுக் கொண்டிருக்கிறாராம்.
பையா நாயகி பாலிவுட் பக்கம் செட்டில் ஆக நினைத்தார். ஆனால் அங்கே ஒரே படத்தில் பல ஹீரோயின்கள் இருப்பது அவருக்குரிய முக்கியத்துவத்தை குறைப்பதாக கருதினார். இந்நிலையில் அவர் தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்கிறார். ஆனால் அந்த படத்திலும் முக்கிய நாயகி உயர்ந்த நடிகை தான்.
தமிழில் அம்மணி கையில் ஒரேயொரு படம் தான் இருக்கிறது. அதனால் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் வாய்ப்பு தேட அவர் முடிவு செய்துள்ளார். இதையடுத்து அவர் ஹீரோக்களுக்கு வாய்ப்பு கேட்டு போன் செய்கிறாராம்.
சென்னை மற்றும் ஹைதராபாத்துக்கு மாறி மாறி பயணம் செய்து தீவிரமாக வாய்ப்பு தேடி வருகிறாராம்.

Saturday, 19 April 2014

வளைகுடா நாடுகளில் டைட்டானிக் சாதனையை முறியடித்த மோகன்லாலின் த்ரிஷ்யம்!

வளைகுடா நாடுகளில் டைட்டானிக் சாதனையை முறியடித்த மோகன்லாலின் த்ரிஷ்யம்!

அபுதாபி: மோகன்லாலின் த்ரிஷ்யம் படம் வளைகுடா நாடுகளில் டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் த்ரிஷ்யம்.
இந்தப் படம் மோகன்லாலின் திரைவாழ்க்கையிலேயே பெரிய சாதனையைப் படைத்திருக்கிறது.

ஐக்கிய அரபு நாடுகளில் 100 நாள்கள் ஓடிய ஒரே படம் என்ற பெருமையை டைட்டானிக் திரைப்படம்தான் இதுவரை பெற்றிருந்தது. ஆனால் அந்த படத்தின் சாதனையை த்ரிஷ்யம் முறியடித்து உள்ளது.
த்ரிஷ்யம் கடந்த ஜனவரி மாதம் 2 ந்தேதி எல்டோரடோவில் வெளியானது. 100-வது நாளை கடந்தும் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.
இந்த படம் கேரளாவில் அனைத்து சாதனைகளையும் உடைத்து மிகப்பெரிய வசூலை கொடுத்தது. ரூ.4.6 கோடியில் மட்டும் தயாரான இந்த திரைப்படம் இதுவரை 51 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இதன் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடிக்கவிருப்பது நினைவிருக்கலாம்.

அட.. மான் கராத்தே ரூ 50 கோடி வசூலாமே

அட.. மான் கராத்தே ரூ 50 கோடி வசூலாமே!

சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படம் இரண்டு வாரங்களுக்குள் ரூ 50 கோடியைத் தாண்டி விட்டதாக அடித்துவிட ஆரம்பித்துள்ளனர்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஓட்டம் சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக உயர்த்தியது.
இந்தப் படம் ரூ 25 கோடியை வசூலித்துவிட்டதாக சிவகார்த்திகேயன் தரப்பில் கூறப்பட்டது. அடுத்த படமான மான் கராத்தேவை உலகமெங்கும் 700 அரங்குகளில் வெளியிட்டனர்.

இந்தப் படம் குறித்து மாறுபட்ட விமர்சனங்கள் வந்துள்ளன. மூன்றாவது நாளே கூட்டம் குறைந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் படத்தின் வசூல் பிரமாதமாக இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
படம் வெளியான 13 நாட்களில் உலகெங்கும் ரூ 50 கோடி வசூலாகியிருப்பதாக இப்போது தகவல் வெளியிட்டுள்ளனர். சென்னையில் மட்டும் ரூ 7.5 கோடி வசூலாகியுள்ளதாம் இந்தப் படத்துக்கு.
ஆனால் இந்த தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில். "சென்னையில் ரூ 7 கோடி வசூலாக குறைந்தது 30 நாட்களாவது படம் ஓடியிருக்க வேண்டும். குறைந்தது 50 அரங்குகளிலாவது வெளியாகியிருக்க வேண்டும். எதை வைத்து மான் கராத்தே 13 நாட்களில் 7.5 கோடி வசூலித்தது எனச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை," என்றார் ஒரு முக்கியப் பிரமுகர்.

இயக்குநர் குருதனபால் கோவையில் அரசு மருத்துவமனையில் மரணம்!

இயக்குநர் குருதனபால் கோவையில் அரசு மருத்துவமனையில் மரணம்!

கோவை: பிரபல இயக்குநர் குருதனபால் கோவை அரசு மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.
குரு தனபால் இயக்கிய முதல் படம் உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன். கார்த்திக் - மோனிஷா - சசிகலா நடித்திருந்தனர், இளையராஜா இசையமைத்திருந்தார்.
அடுத்து அவர் இயக்கிய படம் தாய் மாமன். சத்யராஜ் - மீனா - கவுண்டமணி நடித்திருந்தனர். மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது தாய்மாமன்.

இதைத் தொடர்ந்து மாமன் மகள், பெரிய இடத்து மாப்பிள்ளை, பெரிய மனுஷன், சுயேச்சை எம்எல்ஏ போன்ற படங்களை இயக்கினார் குருதனபால்.
உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த குருதனபால், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இன்று காலை மரணமடைந்தார்.
நடிகர்கள் கவுண்டமணி, சத்யராஜ் மற்றும் அமரர் மணிவண்ணனுக்கு நெருக்கமாக இருந்தவர் குருதனபால் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, 17 April 2014

வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் மீண்டும் இணையும் சூர்யா-ஸ்ருதிஹாசன்

வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் மீண்டும் இணையும் சூர்யா-ஸ்ருதிஹாசன்

பிரியாணி படத்திற்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் சூர்யா மற்றும் ஸ்ருதிஹாசன் இணையப்போகிறார்களாம். ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தில் இந்த ஜோடி இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறதாம். இன்னும் ஒரு மாதத்திற்குள் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்கட்பிரபுவின் முந்தைய படங்கள் போல இந்தப் படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைப்பார் எனத் தெரிகிறது. சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்திலும் ஸ்ருதிஹாசன் ஹரி இயக்கும் பூஜை படத்திலும் பிஸியாக இருப்பதால் அப்படங்கள் முடிந்தபின் இப்படத்தைப் பற்றிய தகவல்கள் தெளிவாகத் தெரியவரும்.

இளையராஜா இசையில் இந்திப் படத்துக்காக பாடிய ஸ்ருதி ஹாஸன்

இளையராஜா இசையில் இந்திப் படத்துக்காக பாடிய ஸ்ருதி ஹாஸன்

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் இந்திப் படத்துக்காக பாடினார் ஸ்ருதி ஹாஸன்.
பிரபல இயக்குநர் பால்கி இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரண்டாவது படம் நடிக்கிறார். இப்படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், பாலிவுட் சாதனையாளர் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை அக்ஷராவின் அக்காவும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். இப்பாடலை பாடிக் கொடுக்கும்படி ஸ்ருதி ஹாசனிடம் தனுஷ்தான் கேட்டுக்கொண்டாராம். அதனால் தனுஷுக்காகவும், தனது தங்கை அக்ஷராவுக்காகவும் பிரசாத் ஸ்டுடியோவில் பாடிக் கொடுத்தாராம் ஸ்ருதி.
ஸ்ருதியின் முதல் பாடல் அரங்கேறியதும் இளையராஜா இசையில்தான். 'தேவர்மகன்', 'ஹேராம்', 'என் மன வானில்' ஆகிய படங்களில் இளையராஜா இசையில் அவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு இடைவெளிக்குப் பிறகு இளையராஜா இசையில் மீண்டும் பாடியுள்ளார் ஸ்ருதி.