Search This Blog

Sunday, 16 February 2014

சிம்பு – நயன்தாராவைத் தொடர்ந்து, கமல் – சிம்ரன்…! – காதலிகள் தோழிகளாகும் சீஸன் தொடங்கியது!

சிம்பு – நயன்தாராவைத் தொடர்ந்து, கமல் – சிம்ரன்…! – காதலிகள் தோழிகளாகும் சீஸன் தொடங்கியது!

தோழி காதலி ஆகலாம், காதலி தோழி ஆக முடியுமா?

நிஜத்தில் சாத்தியமில்லாத இது, சினிமாவில்தான் சாத்தியமாகும். இப்போது, சினிமாத்துறையிலும்….

முன்னாள் காதலியான நயன்தாரா உடன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடிக்கும் சிம்பு, ‘நயன்தாராவை என் தோழி’ என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்.

விரைவில் இன்னொரு நடிகரும், இன்னொரு நடிகையை தோழி என்று சொன்னாலும் ஆச்சர்யமில்லை.

அவர்..பத்மபூஷன் கமல்ஹாசன்…!

மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘த்ரிஷ்யம்’ படத்தை தமிழில் ‘ரீமேக்’குகிறார்கள்.

அந்தப் படத்தில் மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் கமல்ஹாசன் நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பற்றி பல்வேறு ஹேஸ்யங்கள்!

மலையாளத்தில் நடித்த மீனாவே தமிழிலும் நடிப்பார் என்றும், நதியா நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டநிலையில் தற்போது புதிய தகவல்..!

த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் கமலுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார் என்பதே அந்தத் தகவல்.

கமலுடன் ‘பம்மல் கே.சம்பந்தம்’, ‘பஞ்ச தந்திரம்’ ஆகிய படங்களில் ஏற்கெனவே இணைந்து நடித்தவர் சிம்ரன்.

அப்போது கமலுக்கும், சிம்ரனுக்கும் காதல் தீ பற்றிக் கொண்டு திகுதிகுவென எரிந்தது.

வேறு படத்தின் படப்பிடிப்பில் சிம்ரன் இருக்கும்போது, அங்கே காரை எடுத்துக் கொண்டு போய் சில நிமிடங்கள் காத்திருந்து சிம்ரனை பிக்அப் பண்ணிக் கொண்டு போகிறார்.

‘பம்மல் கே.சம்பந்தம்’, ‘பஞ்ச தந்திரம்’ படத்தில் கமல் சிம்ரன் இருவரும் இணைந்து நடித்தபோது கேரவானுக்குள்ளே மணிக்கணக்கில் குடித்தனம் நடத்தினார்கள்.

- என்றெல்லாம் கமலைப் பற்றி அப்போது காதைக்கடித்தார்கள்.

பிறகு கௌதமியின் வரவுக்குப் பிறகு சிம்ரனை கைகழுவினார் கமல் என்பது கடந்த கால வரலாறு.

இப்படியாக, கமலின் காதலியாக இருந்த சிம்ரன், இப்போது கமல் ஜோடியாக ‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாகவும், அவருடன் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் தகவல் அடிபடுகிறது.

காதலிகள் தோழிகளாகும் சீசன் போலிருக்கிறது…!

No comments:

Post a Comment