சிம்பு இனி ‘யங் தல’யாம்..! அப்ப எங்க தல ‘ஓல்டு தல’யா? ஆத்திரத்தில் அஜித் ரசிகர்கள்…!
‘அஞ்சான்’ படத்தில் நடிக்கும் சூர்யாவுக்கு சும்மா பில்ட்அப்புக்காக ‘சௌத் சூப்பர் ஸ்டார்’ என்று அடைமொழி கொடுத்து அழகு பார்த்தது யுடிவி படநிறுவனம்.
இது குறித்த செய்தி வெளியானதும், ‘சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி ஒருவர்தான். வேறு யாரும் அதை பயன்படுத்தக் கூடாது’ என்று ரஜினி ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர்.
இதோ இப்போது… இதே அடைமொழி விஷயத்தில் ‘தல’ அஜித் ரசிகர்களை வம்புக்கு இழுக்கப்போகிறார் சிம்பு.
ஆரம்பத்தில் தன்னை ரஜினி ரசிகனாக காட்டிக்கொண்டார் சிம்பு. அதனாலோ அல்லது ரஜினி ரசிகர்களை தன் பக்கம் இழுக்கும் எண்ணத்தினாலோ ‘யங் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டார்.
இதுநாள்வரை ‘யங் சூப்பர் ஸ்டார்’ என்று தன்னைத்தானே அழைத்து வந்த சிம்புவுக்கு, அந்த அடைமொழி போரடித்துவிட்டது போலிருக்கிறது. எனவே இப்போது ‘யங் தல’ என்ற புதிய அடைமொழியை சூட்டிக் கொள்ளத் தயாராகிவிட்டார்.
அதன் முன்னோட்டமாக, அவரது ரசிகர் மன்றத்தினர் சிம்புவை ‘யங் தல’ என்று அழைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
சிம்புவும் புதிய அடைமொழியை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
சிம்புவுக்கு சூட்டப்பட்ட இந்த புதிய பட்டம் அஜித் ரசிகர்களை கடுப்பேற்றி இருக்கிறது.
‘சிம்பு யங் தல என்றால், எங்க அஜித் என்ன ஓல்டு தலயா?’ – என்று ஆத்திரப்படுகிறார்கள் அஜித் ரசிகர்கள்.
சால்ட் பெப்பர் நரைமுடியுடன் நடிக்கிறார் என்பதற்காக அஜித்தை ‘ஓல்டு தல’ யாக்குவது தப்பாச்சே…!
No comments:
Post a Comment