Search This Blog

Tuesday, 21 January 2014

நடிகர் ஜீவாவுக்கு எதிராகக் கிளம்பிய நால்வர் அணி..!

நடிகர் ஜீவாவுக்கு எதிராகக் கிளம்பிய நால்வர் அணி..!

- என்று நியூட்டனின் மூன்றாம்விதி சொல்வது யாதெனில்…

ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு…!

இதையே சற்று மாற்றி, ‘ஒவ்வொரு எதிர்வினைக்கும் பி(மு)ன்னாலும் நிச்சயமாக ஒரு வினை இருந்திருக்கும்’ என்றும் சொல்லலாம்.

உதாரணத்துக்கு, தன் அண்ணனின் ‘ஜிகே ஃபிலிம் கார்ப்பரேஷன்’ பேனரில் படங்கள் நடித்து வந்த விஷால், திடீரென ‘விஷால் பிலிம் பேக்டரி’ என்ற நிறுவனத்தைத் துவக்கினார். காரணம்..தன் அண்ணன், அண்ணி உடன் ஏற்பட்ட தகராறு!

விஷால் வழியில் அவரது நண்பரான நடிகர் ஜீவாவும் விரைவில் புதிய படக்கம்பெனியை ஆரம்பித்து படங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். காரணம்…ஜீவாவுக்கும் அவரது அப்பா ஆர்.பி.சௌத்ரிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மனக்கசப்பு!

ஆர்.பி.சௌத்ரிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு சுரேஷ், ஜீவன், ஜித்தன் ரமேஷ் என மூன்று மகன்கள்.

அமர் என்கிற நடிகர் ஜீவா இரண்டாவது மனைவியின் மகன்.

முதல் மனைவி, இரண்டாவது மனைவி வாரிசுகளுக்கு இடையில் வழக்கமாக ஏற்படும் பிரச்சனைகள் இவர்களுக்கிடையிலும் உண்டு. ஆனாலும் அவை வெளியே தெரியாதபடி சமாளித்த வந்தார் சௌத்ரி.

இப்போது அவருக்கு வயதாகிவிட்டது. அவரது வாரிசுகள் பட்டத்துக்கு வரும் நேரமும் நெருங்கிவிட்டது. அதன் தொடர்ச்சியாய், சுரேஷ் அண்ட் பிரதர்ஸ் தரப்புக்கும், ஜீவா தரப்புக்கும் சொத்து தொடர்பாக பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதாகக் கேள்வி.

இந்தப் பிரச்சனையில் ஜீவா தரப்புக்கு ஆதரவாக இல்லாமல், முதல் மனைவியின் பிள்ளைகளுக்கு சப்போர்ட் பண்ணுகிறாராம் ஆர்.பி.சௌத்ரி.
தன் அப்பாவை உள்ளடக்கிய நால்வர் அணி, தனக்கு எதிராக வாளை சுழற்றுவது கண்டு அதிர்ச்சியடைந்த ஜீவா, ‘இனி சூப்பர்குட் பிலிம்ஸ் பேனர் தயாரிக்கும் படத்தில் நடிப்பதில்லை’ என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

அதன் காரணமாகவே விரைவில் புதிய படக்கம்பெனியை ஆரம்பிக்கவும் இருக்கிறாராம் ஜீவா.

No comments:

Post a Comment