Search This Blog

Tuesday, 21 January 2014

வெற்றிப்படம் கொடுத்த இயக்குநரை விரக்தியடைய வைத்த முன்னணி ஹீரோக்கள்..!

வெற்றிப்படம் கொடுத்த இயக்குநரை விரக்தியடைய வைத்த முன்னணி ஹீரோக்கள்..!

சினிமா உலகம் விசித்திரமானதொரு உலகம். இங்கே நேற்றைய வெற்றி பற்றி யாருக்கும் அக்கறையில்லை. இன்றைய வெற்றிக்கு மட்டுமே மதிப்பு, மரியாதை…!

‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் வெற்றி, அப்படத்தின் இயக்குநர் சரவணனை முன்னணி இயக்குநர்கள் வரிசையில் உட்கார வைத்தது.

ஜெயிக்கும் குதிரையை கணித்து அதன் மீது சரியாக பணம் கட்டுவதில் கில்லாடியான லிங்குசாமி, முந்திக்கொண்டு சரவணனுக்கு அட்வான்ஸ் கொடுத்து கமிட் பண்ணினார். அவரது அடுத்தப்படமான ‘இவன் வேற மாதிரி’யை தானே தயாரித்தார்.

கதை, திரைக்கதை மற்ற அம்சங்கள் சிறப்பாக இருந்தும் ‘மூக்கு அழகன்’ விக்ரம் பிரபு படத்துக்கு மைனஸாகிப்போனதால் ‘இவன் வேற மாதிரி’ படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை.

இரண்டாவது படத்தில் சறுக்கியதால் இயக்குநர் சரவணனுக்கு சிரமதிசை தொடங்கிவிட்டது!

‘இவன் வேற மாதிரி’ படம் வெளியாவதற்கு முன்புவரை, அவரது அடுத்தப் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டிய ஹீரோக்கள் எல்லாம், இப்போது, அதாவது ‘இவன் வேற மாதிரி’ ரிசல்ட் தெரிந்த பிறகு சரவணன் போன் செய்தால் எடுப்பதே இல்லையாம்.

தன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த இளம் ஹீரோக்கள் இப்படி திடுதிப்பென்று தன்னை கைவிட்டதில் விரக்தியடைந்துவிட்டாராம் சரவணன்.

ஒரு படம் ஓடவில்லை என்றதும் இப்படி ஒதுக்கிட்டாங்களே… என்று வருத்தப்பட்டவர், ஒருவழியாய் மனசைத் தேற்றிக்கொண்டு தற்போது விக்ரமை அணுகி, கதை சொல்லி இருக்கிறார்.

சரவணன் சொன்ன கதையைக் கேட்ட விக்ரம், ரிசல்ட்டை உடனடியாய் சொல்லாமல் அவரை காத்திருப்பில் வைத்திருக்கிறார்.

இதுதான் சினிமா…!

No comments:

Post a Comment