ரஜினி படங்களுக்கே பெங்களூரில் தடை? : கன்னட திரையுலகினர் அழிச்சாட்டியம்!
ரஜினி படங்களையே கன்னடத்தில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யக்கூடாது என்று கன்னட திரையுலகினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் வசூலை வாரிக்குவிக்கும் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, விக்ரம், விஷால் ஆகியோரின் படங்கள் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு கர்நாடகாவில் ரிலீஸ் வருகிறது. இதுபோல் தெலுங்கு படங்களும் கன்னடத்தில் டப்பிங் செய்யப்படுகின்றன.
தமிழ், தெலுங்கு டி.வி. தொடர்களும் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அங்குள்ள சேனல்களில் ஒளிபரப்பப்படுகின்றன. இதனால் நேரடியாக ரிலீசாகும் கன்னட படங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கன்னட திரையுலகினர்கள் எதிர்க்கிறார்கள்.
No comments:
Post a Comment