Search This Blog

Wednesday, 29 January 2014

எங்கள் குழந்தைகளும், மனைவியும் கேட்பாரற்ற அனாதைகளாக கிடக்கட்டுமா???… : டைரக்டர் சேரன் உருக்கம்!

எங்கள் குழந்தைகளும், மனைவியும் கேட்பாரற்ற அனாதைகளாக கிடக்கட்டுமா???… : டைரக்டர் சேரன் உருக்கம்!

மறைந்த டைரக்டர் இராசு மதுரவன் கடைசியாக டைரக்ட் செய்த ‘சொகுசு பேருந்து’ படத்தின் ஆடியோ பங்ஷன் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

விழாவில் டைரக்டர் சேரனும் ஒரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பாண்டியநாடு தியேட்டர்ஸ் என்ற பெயரில் சொந்தக்கம்பெனி ஆரம்பித்து படம் தயாரித்து டைரக்ட் செய்து வந்த இராசுமதுரவனின் திடீரென்ற இறப்பு இப்போது அவரது மனைவிக்கும், இரண்டு பெண் குழந்தைகளுக்கும் கடன் என்கிற அசுரனைப் போல நின்று பயமுறுத்துகிறது.

இதுபற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமாக பேசியிருக்கிறார் சேரன். சினிமாக்காரனின் வாழ்க்கைக்கு எந்தவித கேரண்டியும் இல்லை என்பதே அவரின் வாதம்.

இதோ அவருடைய உருக்கமான பேச்சு:

திடீர் மரணம் ஒரு குடும்பத்தை எவ்வளவு நிலை குலைய வைக்கும் என்பதை இன்று(நேற்று) என் கண்முன்னே பார்த்தேன்.

எதிர்கால சிந்தனை இல்லாத வாழ்க்கை அபாயகரமானது. இயக்குனர் ராசுமதுரவன் திடீரென இறந்துவிட்டார், இப்போது அவருடைய குடும்பத்தின் மீது அவர் திரைப்படம் எடுக்க வாங்கிய கடன் அசுரனை போல நின்று பயமுறுத்துகிறது. எந்த விதமான கேரண்டியும் இல்லாத வாழ்க்கையே சினிமா வாழ்க்கை.

எந்த தொழில் செய்தாலும் இவ்வளவு முதலீடு செய்தால் இவ்வளவு மிஞ்சும் என்ற கணக்கு உண்டு. சினிமாவில் மட்டும் அது கவனிக்க முடிவதே இல்லை. ஒரு சில நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் தவிர பெரும்பாலோனோர் என்ன கிடைக்கும் எப்படி வாங்கிய கடன் அடையும் என்று தெரியாமலேயே திரைப்படம் எடுக்க வேண்டிய நிலை.(நான் உள்பட)….

ஆனால் வெளியில் இருந்து பார்க்கும் நிறைய பேருக்கு சினிமா கொட்டிக் கொடுக்கிறது என்ற எண்ணத்திலேதான் சினிமாக்காரர்கள் என்றால் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள். படம் எடுத்தவன் நிலை தெரிந்தால் எந்த மனிதனும் படத்தை திருட்டுத்தனமாக ஆன்லைன், விசிடி, டிவிடி இவைகளில் வெளியிடவோ பார்க்கவோ மாட்டார்கள்.

வெளியாகி ஒரு வாரம் திரைப்படம் ஓடினால் மட்டுமே போட்ட காசு திரும்ப வரும், தொலைக்காட்சி உரிமை நல்ல விலைக்கு போகும் என்ற நிலையில் தான் எல்லா படமும் வெளியாகிறது…

இதில் 90% நஷ்டமே வருகிறது. காரணம் முதல் நாளே எதோ ஒரு வழியில் திருட்டுத் தனமாக படம் போடும் கூட்டம் அதிகமாக இருப்பதே காரணம். அதேநேரம் விஞ்ஞான வளர்ச்சியை தடுக்கவும் முடியாது.

என்ன செய்யலாம் ஏமாளியாகவே நாங்கள் செத்து மடிய வேண்டியது தானா???.. எங்கள் குழந்தைகளும் மனைவியும் கேட்பாரற்ற அனாதைகளாக கிடக்கட்டுமா???..

No comments:

Post a Comment