விஜய், அஜீத் பட பாடல்கள் வெளியீடு: ரசிகர்கள் வரவேற்பு
விஜய், அஜீத் பட பாடல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் நடித்த ‘ஜில்லா’ படமும், அஜீத் நடித்த ‘வீரம்’ படமும் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜில்லாவில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். நேசன் இயக்கியுள்ளார். வீரம் படத்தில் நாயகியாக தமன்னா நடித்துள்ளார். இப்படத்தை சிவா இயக்கியுள்ளார். இரு படங்களும் ஒன்றாக ரிலீசாவதால் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருவரின் ரசிகர்களும் படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களில் கட்–அவுட், கொடி, தோரணங்கள் அமைக்க தயாராகி வருகிறார்கள்.
இந்த நிலையில் வீரம் படத்தின் பாடல்கள் இன்று வெளியானது. இது போல் ஜில்லா படத்தின் பாடல்களை விஜய் வெளியிட்டார். இப்பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இணைய தளங்களில் பதிவிறக்கம் செய்து பாடல்களை கேட்டு வருகிறார்கள்.
வீரம் பட பாடல்கள் இரு தினங்களுக்கு முன் இண்டர்நெட்டில் கசிந்து விட்டது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். யாரோ திருட்டுத்தனமாக இதனை வெளியிட்டு விட்டனர்.
இது குறித்து படக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், சிறு கசிவுகளால் சமுத்திரம் காலியாகி விடாது. வீரம் பட பாடல்களை கேட்க ஆவலுடன் இருக்கும் அஜீத் ரசிகர்கள் இதனால் நம்பிக்கை இழந்து விடமாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment