இந்தப் படமும் ஓடாது போலருக்கே..! ப்ளாப் படம் கொடுப்பதில் ஹாட்ரிக் அடித்த ஜீவாவின் பதட்டம்..!
முகமூடி, டேவிட், நீதானே என் பொன்வசந்தம் என தொடர்ந்து ப்ளாப் படங்களில் நடித்து ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கும் ஜீவாவின் தற்போதைய நம்பிக்கை என்றென்றும் புன்னகை படம்தான்.
சினிமாவை எதிர்க்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க.மணியின் மகன் தயாரிக்கும் இந்தப்படத்தை தி.மு.க.தலைவரின் பேரன் உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிடுகிறார்.
அந்த வகையில் தயாரிப்பாளர் சேஃபாகிவிட்டார்.
ஆனால் படத்தின் நாயகனான ஜீவாவுக்குத்தான் இன்னும் குளிர் ஜுரம் போகவில்லை.
2003 ஆம் ஆண்டு ஆசைஆசையாய் படத்தில் அறிமுகமான ஜீவா இதுவரை 21 படங்களில் நடித்திருக்கிறார்.
இவற்றில் ராம், ஈ, சிவா மனசுல சக்தி, கோ ஆகிய நான்கு படங்கள் மட்டுமே ஒரிஜினல் வெற்றிப்படம். ‘நண்பன்’ விஜய் நடித்த ஷங்கரின் படம்.
மற்றவை எல்லாமே தயாரிப்பாளரையே காவு கொடுத்த, காணமல்போகச் செய்த தோல்விப்படங்கள்.
அதிலும் குறிப்பாக கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து ஜீவா நடித்த அத்தனை படங்களுமே (கோ தவிர) தோல்விப்படங்கள்.
இந்நிலையில் என்றென்றும் புன்னகை படமும் ஓடாவிட்டால், நம்மை ஒரு பயலும் சீண்ட மாட்டான் என்பதை உணர்ந்து நடுங்கிப்போயிருக்கிறார் ஜீவா.
ஜீவாவின் நடுக்கத்துக்கு மற்றொரு காரணம்….என்றென்றும் புன்னகை படத்தின் இயக்குநர் அஹ்மது ஏற்கனவே வாமனன் என்ற சூப்பர் ப்ளாப் படத்தைக் கொடுத்தவர் என்பது.
அதுமட்டுமல்ல, படத்தைப் பார்த்த பிறகு, ‘இந்தப் படமும் தாம்பரத்தைத் தாண்டாது போலருக்கே’ என்ற எண்ணமும் ஜீவாவுக்கு வந்திருக்கிறது.
எனவே முன்னணி நாளிதழ் நிருபர்கள் சிலரை அழைத்து,
”பாஸ்.. நீங்கதான் எனக்கு ஹெல்ப் பண்ணணும். என்றென்றும் புன்னகை படத்தை சூப்பரா இருக்குன்னு எழுதி படத்தை வெற்றி பெற வைக்கணும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
குடும்பத்தோடு பார்க்கலாம்னு மீடியாக்கள் எழுதினால் மட்டும் படம் ஓடிடுமா என்ன?
படத்தில் சரக்கு இருக்கணும் ஜீவா..!
No comments:
Post a Comment