திருமணம் எப்போது? த்ரிஷா
எனது திருமணம் விரைவில் நடக்கும் என்று த்ரிஷா கூறினார். சினிமா நட்சத்திரங்கள் ஆடும் நட்சத்திர கிரிக்கெட்டின் சென்னை ரைனோஸ் அணி தூதராக நியமிக்கப்பட்டுள்ள த்ரிஷா கூறியதாவது: சென்னை ரைனோஸ் அணி தூதராக தேர்வானதில் மகிழ்ச்சி. நான் நடித்துள்ள என்றென்றும் புன்னகை வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் நடித்துள்ள படம் ரிலீஸ் ஆகி இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதில் சிறந்த கேரக்டரில் நடித்துள்ளேன். நான் நடிக்கும் ஒவ்வொரு படமுமே எனக்கு முக்கியம்தான்.
அந்த வகையில் இதுவும் முக்கியமான படம்தான். எப்போது செட்டிலாக போகிறீர்கள்? என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக விரைவில் செட்டிலாக போகிறேன். மனதுக்குப் பிடித்தவருடன் வாழ்க்கையை பகிர்ந்துகொள்வது எப்போதுமே மகிழ்ச்சியானதுதான். இவ்வாறு த்ரிஷா கூறினார்.
No comments:
Post a Comment