“சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?
எங்கே சொல்லுங்க பார்க்கலாம்….
“சிக்கிக்கு…. சிக்கிக்கிச்சு”
தொண்டைக்குள்ள நாக்கு சிக்கிக்கிட்டு சொல்ல வரலையா? சரி விடுங்க….நியூஸைப் படிங்க…
என்.சி.ஆர் மூவி கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் என்.ராஜேஷ்குமார். இவர் நாளைய இயக்குனர் சீசன்- 2 வில் விருது வாங்கியவர். இதே தலைப்பில் தான் நாளைய இயக்குனருக்காக குறும்படம் இயக்கி விருது பெற்றர். இப்போது “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறேன். .
சென்னையில் ஒரு நாள், சுற்றுலா போன்ற படங்களில் நடித்த “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” படத்தில் மிதுன் கதாநாயகனாக நடிக்கிறார்.
மிருதுளா கதாநாயகியாக நடிக்கிறார்.
இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதவன் நடிக்கிறார்.
வில்லன் வேடத்தில் அனூப் அரவிந்த் நடிக்கிறார்.
மற்றும் அஞ்சலிதேவி, ரோமியோ பால், அருண், டெலிபோன்.வி.கருணாநிதி, அஸ்வின், குரு, அப்சல் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – என்.எஸ். ராஜேஷ்குமார், இசை – விஜய் பெஞ்சமின், பாடல்கள் – ராகுல்பிரசாத், ஹாஜாமுகம்மது, நடனம் – அஜெய் சிவசங்கர், மது.ஆர், எடிட்டிங் – ஏ.கெவின்
தயாரிப்பு – கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார்.
“சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” படம் பற்றி இயக்குநர் என்.ராஜேஷ்குமார்…..
“இது ஒரு ரொமான்டிக் பயணக் கதை! முழுக்க முழுக்க காதல்தான் மையக் கரு.. இதுவரை நிறைய படங்களில் ரயிலில் சில காட்சிகள் எடுத்திருப்பார்கள். ஆக்ஷன் அல்லது பாடல் காட்சிகள் எடுத்திருப்பார்கள். ஆனால் ஒரு முழுப் படத்தையும் ஓடும் ரயிலிலேயே படமாக்கியது இதுவே முதன் முறை ! சென்னை முதல் நாகர்கோவில் வரை செல்லும் ரயிலில் நடக்கும் சுவையான சம்பவங்களின் தொகுப்பு தான் “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு”. சென்னையிலிருந்து மாலையில் கிளம்பும் ரயில் நாகர்கோவில் போய் சேர ஆகும் இடைவெளியான ஒரு இரவில் நடக்கும் ரொமான்டிக் கதை தான் இது.
அதெல்லாம் இருக்கட்டும் பிரதர்…முதல்ல படத்தோட தலைப்புக்கு அர்த்தம் சொல்லுங்க..அதை தெரிஞ்சக்கலைன்னா தலையே வெடிச்சுடும்…
“சிதம்பர கிருஷ்ணன் என்ற கதாநாயகனின் பெயரை நண்பர்கள் செல்லமாக சிக்கி என்று அழைப்பதையே தலைப்பாக்கி இருக்கிறோம். ”
வெயிட்..வெயிட்..கதை புரிஞ்சுபோச்சு…சிக்கி என்கிற சிதம்பர கிருஷ்ணனுக்கு ஃபிகர் சிக்கிக்கிச்சு…
கரெக்ட்டுங்களா டைரக்டர் சார்?
No comments:
Post a Comment