Search This Blog

Sunday, 8 December 2013

ஜெயம்ரவி- நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

ஜெயம்ரவி- நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

ஜெயம்ரவியுடன் முதல் தடவையாக நயன்தாரா ஜோடி சேர்கிறார். இந்த படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். ஏ.ஜி.எஸ். படநிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு சென்னை ஸ்பின்னிங் மில்லில் துவங்கியது.

அங்கு ரெயில் நிலையம் அரங்கு அமைத்து ஜெயம்ரவி, நயன்தாரா நடித்த காட்சிகளை ஜெயம் ராஜா படமாக்கினார். வழக்கமாக வேற்றுமொழி படங்களைதான் ஜெயம் ராஜா தமிழில் ‘ரீமேக்’ செய்து இயக்குவது உண்டு. ஜெயம், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்டவை ரீமேக் படங்கள்தான்.

தற்போது ஜெயம் ரவி, நயன்தாரா நடிக்கும் படத்தை நேரடி படமாக எடுக்கிறார். கணேஷ் வெங்கட்ராமன், ஹரீஸ் போன்றோரும் இதில் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.

No comments:

Post a Comment