வீரம் படத்தில் அடிக்கடி அஜித் பேசும் ரிப்பீட் டயலாக் என்ன தெரியுமா?
நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி…! பாட்ஷா படத்துக்குப் பிறகுதான் இப்படிப்பட்ட பன்ச் டயலாக்குகள் ரசிகர்கள் மத்தியில் பாப்புலராகின. காலப்போக்கில் கஞ்சா கருப்பு போன்ற சில்லறை பார்ட்டிகள் எல்லாம் பன்ச் டயலாக் பேச ஆரம்பித்ததினால், பன்ச் டயலாக்குகள் பஞ்சர் டயலாக்குகளாகிவிட்டன.
பாட்ஷா படத்துக்கு முன் எல்லாம் ரிப்பீட் டயலாக்குகள்தான் பாப்புலர்.
16 வயதினிலே படத்தில் – இது எப்படி இருக்கு? என்பார் ரஜினி. 24 மணி நேரம் படத்தில் – என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்களே என்பார் சத்யராஜ்.
இப்படி ஒரு ரிப்பீட் டயலாக்கைத்தான் வீரம் படத்தில் தொடர்ந்து பேசுகிறாராம் அஜித்.
என்ன நான் சொல்றது – என்பதே அந்த டயலாக். இதுநாள் வரை அது…………என்ற அஜித்தின் டயலாக்தான் தல ரசிகர்களின் தாரக மந்திரமாக இருந்தது.
இனி? என்ன நான் சொல்றது!
No comments:
Post a Comment