சந்தானத்துக்கு எதிராக பெண்கள் போர்க் கொடி: என்றென்றும் புன்னகைக்கு சோகம்
பெண்கள் எதிர்ப்பால் என்றென்றும் புன்னகை படத்தில் நடிகர் சந்தானத்தின் சர்ச்சைக்குரிய காமெடி காட்சி நீக்கப்பட்டது.
ஜீவா, திரிஷா, ஆண்ட்ரியா, சந்தானம் நடித்துள்ள என்றென்றும் புன்னகை´ படத்தின் டிரெய்லர் காட்சியில் பெண் ஊழியர் ஒருவர் சந்தானத்திடம் வந்து (நேரம் சொல்லி அனுமதி கேட்பது போன்ற காட்சி அமைப்பு) “அஞ்சு பத்துக்கு போகட்டுமா..,´ என அனுமதி கேட்க இதற்கு சந்தானம் “ஏன், நீ நல்லாத்தானே இருக்கே; ஐநூறு ஆயிரத்திற்கு போயேன்´ என இரட்டை அர்த்த வசனம் பேசி கேலி செய்வார்.
இக்காட்சிக்கு பெண்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு குரல் எழுந்தது. “இக்காட்சியை நீக்க வேண்டும்´ என, மனிதஉரிமைகள் கழக சர்வதேச அமைப்பின் மகளிர் அணியும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையொட்டி, படத்தின் டிரெய்லரிலும், படத்திலும், இக்காட்சி நீக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் நேற்று தெரிவித்தனர்.
Tags: என்றென்றும் புன்னகை, சந்தானம், பெண்கள், போர்க் கொடி
No comments:
Post a Comment