ஆரம்பம் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் : ‘இனி தான் ஆரம்பம்’ இது எங்களுடைய தலைப்பு… ஆரம்பிச்சிட்டாய்ங்க…
அஜித் நடிப்பில் நாளை உலகமெங்கும் வெளிவரவுள்ள ஆரம்பம் திரைப்படத்தினை தடை செய்யக்கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘இது தான் ஆரம்பம்’ என்ற தலைப்பினை நாங்கள் ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் பதிவு செய்துள்ளோம். எனவே ஆரம்பம் என தலைப்பிடப்பட்டுள்ள படத்தினை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என பிளக் கிங்டொம் பிக்சர்ஸ் சார்பில் கே. கண்ணன் என்ற தயாரிப்பாளர் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
கொலிவூட்டில் அண்மைக்காலமாகவே படம் வெளிவரும் நிலையில் தலைப்பு, பழைய கடன் பாக்கி என பல்வேறு குற்றச்சாட்டில் படத்தினை தடை விதிக்கக்கோருவது வாடிக்கையாகவிட்டது.
ஆரம்பம் படத்தின் முற்பதிவுகள் தொடங்கி அடுத்த சில மணி நேரங்களிலேயே பல இடங்களில் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்துவிட்டன. இந்நிலையில் இப்படி ஒரு குழப்பம்.
பொழுது விடிஞ்சிருச்சு என்னடா ஒன்னும் நடக்கலை என்டு பார்த்தன் நடந்திருச்சு…. நடத்திட்டாய்ங்க…
Tags: அஜித், ஆரம்பம்
No comments:
Post a Comment