Search This Blog

Tuesday, 29 October 2013

ஆர்யாவை வெளுத்து வாங்கிய அனுஷ்கா

ஆர்யாவை வெளுத்து வாங்கிய அனுஷ்கா

இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யாவை வெளுத்து வாங்கியுள்ளார் அனுஷ்கா.

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள திரைப்படம் இரண்டாம் உலகம்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொண்டு பேசிய செல்வராகவன், இனிமேல் பாலிவுட், ஹாலிவுட் என்று சொல்லாதீர்கள், காரணம் இனி தென்னிந்திய சினிமாதான் பேசப்படப்போகிறது.

அதற்கு ராஜமௌலி, நான், தமிழில் இன்னும் பல இயக்குனர்கள், மலையாளத்தில் சிலர் மற்றும் கன்னடத்தில் சிலர் என்று எல்லோரும் சினிமாவை உலக அளவில் கொண்டு போகப்போகிறார்கள் என்று கூறியுள்ளார்.

அடுத்ததாக பேசிய ஆர்யா, இந்த படத்தின் உண்மையான ஹீரோ நான் இல்லை, அனுஷ்காதான்.

நான் சொல்றது எந்தளவுக்கு உண்மைன்னு இரண்டாம் உலகம் டிரைலரை பார்த்தாலே புரியும் என்றும் இந்த படத்தில் அவரின் நடிப்பு பிரமாதம் எனவும் கூறியுள்ளார்.

Tags: அனுஷ்கா, ஆர்யா

No comments:

Post a Comment