ஆக்ஷனுக்கு அஜித், ரொமான்ஸுக்கு ஆர்யாவா ? ஆரம்பம் பற்றி விஷ்ணுவர்தன் பேட்டி
தீபாவளி சரவெடியில் வெடிக்கப்போகும் ஆரம்பம் படம் பற்றி மனம்திறந்துள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா மற்றும் டாப்சி நடித்துள்ள திரைப்படம் ஆரம்பம்.
வருகின்ற 31ம் திகதி வெளியாகவுள்ள ஆரம்பம் படம் குறித்து அமோக வார்தைகளை தூவியுள்ளார் விஷ்ணுவர்தன்.
கேள்வி: ஆரம்பம் படத்தை அஜித் பாத்துட்டு என்ன சொன்னார்?
பதில்: ரொம்ப நல்லாயிருக்குனு சொன்னார். இது என்னோட சிறந்த படங்கள்ல ஒண்ணு. ரொம்ப நன்றி விஷ்ணு அப்படினு சொன்னார்.
சார், நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்னு சொன்னேன். குடும்பத்தோட படம் பாத்துட்டு என்கிட்ட ஜாமி (ஆர்யா) பத்தி தான் ரொம்ப பேசினாரு. ரொம்ப நல்லா பண்ணியிருக்கான்னு பாராட்டினாரு.
இந்தப் படத்தோட சிறப்பம்சமே படத்தோட கதை தான் விஷ்ணு. நான் ஒரு நல்ல கதாபாத்திரம் பண்ணிருக்கேன். எல்லாருமே அவங்கங்க கதாபாத்திரத்தில் ரொம்ப நல்லா பிரமாதமா நடிச்சுருக்காங்க.
எப்போதுமே என்னோட படங்கள்ல என்னோட கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் இருக்கும். மத்தவங்களும் நடிச்சிருப்பாங்க. ஆனா இந்த படம் அப்படியில்லைனு ரொம்ப பாராட்டினார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு.
கேள்வி: ஆக்ஷனுக்கு அஜித், ரொமான்ஸுக்கு ஆர்யாவா?
பதில்: அப்படியெல்லாம் கிடையாது. படம் பாத்தீங்கன்னா தெரியும். இது ஒரு ஆக்ஷன் டிராமா. கொமடிக்காக சந்தானத்தையும், ரொமான்ஸ்க்காக ஆர்யாவையும், ஆக்ஷனுக்கு அஜித்தையும் யூஸ் பண்ணா அது தப்பான படம்.
படத்துல ஆர்யா முக்கியமான கதாபாத்திரம் பண்ணிருக்காரு. அஜித்துக்கு இணையா ஆர்யாவுக்கு நிறைய காட்சிகள் இருக்கு.
கேள்வி: ஸ்டில்ஸ் எல்லாம் பார்க்கும் போது அஜித் பொலிஸ் வேடத்துல நடிச்சுருக்காரா?
பதில்: இப்படிக் கேட்டா நான் என்ன பதில் சொல்ல முடியும். படம் பாத்து தெரிஞ்சுக்கிட்டுமே. இப்பவே அஜித்துக்கு இந்த ரோல் அப்படின்னா, படம் பாக்குற அப்போ அந்த எதிர்பார்ப்பு இருக்காது. அதனால இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பல.
கேள்வி: பெரிய பட்ஜெட், நிறைய நடிகர்கள் கொண்ட படத்தை முடிச்சாச்சு, அடுத்த ப்ளான் என்ன?
பதில்: எனக்கே தெரியல. என்னோட எல்லா படங்களையும் அப்படித்தான் பண்ணிருக்கேன். மற்ற இயக்குனர்கள் மாதிரி படம் முடியும் முன்பே அடுத்த படத்துக்காக அட்வான்ஸை வாங்கி வச்சுக்குற ஆள் நான் இல்ல.
படம் வெளியான உடனே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு, அப்புறமா தான் ப்ளான் பண்ணுவேன். என்ன கதை பண்ணலாம்னு யோசிப்பேன். அடுத்த படத்தை பத்தி எனக்கு யோசிக்க கூட இப்ப டைமில்லை. அந்தளவிற்கு ஆரம்பம் பணிகளுக்காக ஓடிட்டு இருக்கேன்.
கேள்வி: ஆரம்பம் படத்தின் இந்தி ரீமேக் பண்ணச் சொன்னா பண்ணுவீங்களா?
பதில்: கண்டிப்பா பண்ணுவேன். இதுல என்ன தப்பிருக்கு. இப்பவே நிறைய பேர் பட வெளியீட்டிற்காக காத்துட்டு இருக்காங்க. பாக்கலாம், படம் வெளியாகி எல்லாம் நல்லபடியா அமைஞ்சா இயக்க தயாரா இருக்கேன்.
கேள்வி: இந்தில பண்ணா அஜித், ஆர்யா ரோல்ல எல்லாம் யார் நடிச்சா நல்லாயிருக்கும்?
பதில்: தெரியல, எல்லாக் கேள்விக்கும் படம் வெளியான உடனே தான் பதில் கிடைக்கும். இப்பவே படத்தை இந்தி நடிகர் யாருக்காவது போட்டுக் காட்டி, அப்படியே அவரை வெச்சு ஒரு இந்தி படம் பண்ணிரனும் அப்படினு எல்லாம் நான் ப்ளான் பண்ணல.
இந்தி படம் பேசிக்கிட்டிருக்கேன். ஆனால் அது ஆரம்பம் ரீமேக் கிடையாது. இப்பவே அஜித், ஆர்யா வேடத்துல யார் நடிச்சா நல்லாயிருக்கும்னு கேட்டா எனக்கிட்ட பதில் இல்லை.
ஏன்னா யார் நடிச்சா நல்லாயிருக்கு, அஜித் சார் இமேஜ் யாருக்கு செட்டாகும், அப்படினு நிறைய விடயங்கள் உட்காந்து பேசி முடிவு பண்ணனும். இப்படி நிறைய விடயங்கள் இருக்கு.
கேள்வி: ஆரம்பம் படத்தப் பத்தி இணையத்துல இருக்கு முக்கியமா டிவிட்டர்ல இருக்க பரபரப்பை எல்லாம் கவனிக்குறீங்களா?
பதில்: இல்லைங்க. காரணம், எனக்கு நேரமில்லை. ட்விட்டர் பக்கம் கூட இப்போ நான் போறதில்லை. 2 நாளைக்கு ஒரு தடவை ஆரம்பம் பத்தி எல்லாம் சொல்லுவாங்கன்னு பார்ப்பேன். ஆனா அதுக்காக அதுல ரொம்ப கவனம் செலுத்த மாட்டேன், ஏன்னா எனக்கு பயம் என்கிறார் விஷ்ணுவர்தன்.
Tags: அஜித், ஆரம்பம், ஆர்யா, தீபாவளி, பேட்டி, விஷ்ணுவர்தன்
No comments:
Post a Comment