Search This Blog

Monday, 28 October 2013

ஆரம்பத்திற்கு கட்டவுட் வைத்த விஜய் ரசிகர்கள்

ஆரம்பத்திற்கு கட்டவுட் வைத்த விஜய் ரசிகர்கள்

அஜித்தின் ஆரம்பம் பட வெற்றி பெற வாழ்த்தி விஜய் ரசிகர்கள் கட்டவுட் வைத்துள்ளனர்.

அஜித்தின் ஆரம்பம் தீபாவளி சரவெடியில் வெடிக்க தயாராகி விட்டது.

இந்நிலையில் ஆரம்பம் படம் வெற்றி பெற வாழ்த்தி மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் கட்டவுட் வைத்துள்ளனர்.

குறித்த கட்டவுட் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த கட்டவுடில் அஜித்துக்கு விஜய் கைக்கடிகாரம் கட்டிவிடுவது போன்ற புகைப்படம் உள்ளது.

இணையத்தளத்தில் இந்த கட்டவுட் போடப்பட்டவுடன் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அதை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

மேலும் விஜய் ரசிகர்கள் ஆரம்பம் படத்தை ஆதரித்து வைத்துள்ள கட்டவுட்டை பார்த்த அஜித் ரசிகர் மன்றத்தினர் உருகிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags: அஜித், ஆரம்பம், ரசிகர்கள், விஜய்

No comments:

Post a Comment