கல்லூரி பேய் படம்...!
பொதுவாக பேய் படம் என்றால் அடர்ந்த காடு, பாழடைந்த வீடு, சுடுகாடு இப்படித்தான் பயமுறுத்துவார்கள். முதன் முறையாக ஒரு கல்லூரிக்குள் பேயை காட்டி பயமுறுத்தும் படம் அஞ்சல்துறை. மூன்று நண்பர்கள் ஒரு அறையில் தங்கிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு அஞ்சல் (அதாங்க லெட்டர்) வருகிறது. அது அவர்களை இரவு நேரக் கல்லூரியில் சேரச் சொல்கிறது. (அப்படி ஒரு கல்லூரி இருக்கிறதா என்ன?). மூன்று பேரும் ஆர்வமாக போய் சேருகிறார்கள். அப்புறம்தான் தெரிகிறது அது நிஜ கல்லூரியே அல்ல என்பது. அது பேய் கல்லூரியாம்.
இப்படி ஒரு திகில் கதையுடன் அஞ்சல்துறையை எடுத்திருக்கிறார்கள். மோகன், நாராயணன், என்ற நியூபேஸ்களுடன், சௌபர்னிகா, வனிஷ்கா நடித்துள்ளனர். செந்தில், வடிவுக்கரசி, போண்டாமணி, நெல்லை சிவா, பாண்டு, பெஞ்சமின் என சின்ன சின்ன கமெடியன்கள் நிறையபேர் நடித்திருக்கிறார்கள், ஏ.ஆர்.ரவி கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, எட்டிட்டிங் பாடல்கள் என அத்தனை வேலையும் அவரே செய்திருக்கிறார். இந்த மாத கடைசியில் ரிலீசாகுது.
No comments:
Post a Comment