Search This Blog

Sunday, 8 September 2013

நான்தான்டா டிரைய்லர் வாங்கி கொடுத்த வாய்ப்பு: அனோகா!!

நான்தான்டா டிரைய்லர் வாங்கி கொடுத்த வாய்ப்பு: அனோகா!!

ராம்கோபால் வர்மா தமிழ், தெலுங்கில் டைரக்ட் செய்து வரும் படம் நான்தான்டா. இதில் ஹீரோயினாக அறிமுகமாகிறவர் அனோகா. மும்பையை சேர்ந்தவர். இவர்தான் வசந்தபாலன் இயக்கும் காவியத் தலைவன் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த வாய்ப்பு கிடைத்த வரலாற்றை அனோகா இப்படி கூறுகிறார்.

ஒரு பப்ளிக் பங்கஷன்ல என்னை பார்த்துட்டு ராம்கோபால்வர்மா சார் என்னை படத்துக்கு பிக்ஸ் பண்ணினாங்க. ஆடிசன்கூட பண்ணிப் பார்க்கல. நான்தான்டா படத்துல பக்கா வில்லேஜ் கேர்ள் கேரக்டர். நோ கிளாமர், ஒன்லி ஹோம்லி. நான்தான்டா படத்தோட டிரைய்லர் பார்த்துட்டு வசந்தபாலன் சார் காவியத் தலைவன்ல நடிக்க சான்ஸ் கொடுத்தார். அதுல நான் பாண்டிய நாட்டு இளவரசியாக்கும். என்னோட வெயிட்டுக்கு ஈக்குவலா நகை போட்டு நடிக்கிறேன். படத்துல பக்கம் பக்கமா வசனம் இருக்கு நான் கத்துக்கிட்டது இல்லே என்கிற தமிழ் வார்த்தை மட்டும்தான். இங்க என்ன கேட்டாலும் இல்லே இல்லேன்னுதான் சொல்றாங்க. லைட் பாய்லேருந்து, மேக்அப் மேன் வரைக்கும் தமிழ் பேசி கத்துக்கிட்டிருக்கேன். காவியத் தலைவன் முடியுறதுக்குள்ள உங்க ஊர் பொண்ணாயிடுவேன். அப்புறம் குஷ்பு, ஜோதிகா மாதிரி இங்கேயே செட்டிலாயிட வேண்டியதுதான் என்கிறார்.

No comments:

Post a Comment