Search This Blog

Monday, 2 September 2013

இயக்குநர் கதிர் திருமணம் : பாரதிராஜா-பாலா வாழ்த்து!

இயக்குநர் கதிர் திருமணம் : பாரதிராஜா-பாலா வாழ்த்து!

இயக்குநர் கதிர் தனது உறவுக்கார பெண்ணான சாந்தினியை இன்று(செப்.,2ம் தேதி) கரம் பிடித்தார். மதுரை, திருப்பரங்குன்றத்தில் நடந்த இவர்களது திருமணத்திற்கு இயக்குநர் பாரதிராஜா, பாலா உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். இதயம் படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்தவர் கதிர். தொடர்ந்து காதலர் தினம், காதல் தேசம், காதல் வைரஸ் போன்ற காதல் படங்களை இயக்கியுள்ளார். இவருக்கும், இவரது உறவுக்கார பெண்ணான தஞ்சாவூரை சேர்ந்த சாந்தினி தேவிக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, செப்.,2ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மதுரை, திருப்பரங்குன்றத்தில் இவர்களது திருமணம் விமரிசையாக நடந்தது. மதுரையில் இவர்களது திருமணம் நடந்ததால் திரையுலகினர் பலர் கலந்து கொள்ளவில்லை. ஆனபோதும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, டைரக்டர் பாலா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கதிர்-சாந்தினியின் திருமண வரவேற்பு சென்னையில் செப்.,4ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

No comments:

Post a Comment