ஆக்ஷன் ஹீரோவாகிறார் விஜயசேதுபதி
தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜயசேதுபதி, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும் படங்களுக்குப்பிறகு கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார். அதோடு அதுவரை அவரை புறக்கணித்து அல்லது கண்டுகொள்ளாமல் இருந்த இயக்குனர்கள்கூட இப்போது அவரை வைத்து ஒரு படம் பண்ணி விட வேண்டும் என்று சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆக, கைவசம் அரை டஜன் படங்கள் வைத்திருக்கும் விஜயசேதுபதி, ஒரு படத்தில் தாடியே இல்லாமல், இன்னொரு படத்தில் தாடி வைத்து, அதற்கடுத்த படத்தில் லேசாக தாடி வைத்து என படத்துக்குப்படம் தன்னை மாற்றியபடி நடித்து வருகிறார். இதில் புதிதாக நடிக்கவுள்ள வன்மம் என்ற படத்தில் முறுக்கு மீசை வைத்தபடி நடிக்கப்போகிறாராம்.
வன்மம் என்று சொன்னாலே தனக்கு துரோகம் செய்த ஒருவரை பழிதீர்க்க துடிப்பதுதான். அதனால், ஆரம்பத்தில் சாதாரணமானவராக இருக்கும் விஜயசேதுபதி, ஒரு கட்டத்தில் அதிரடி நாயகனாக உருவெடுக்கிறாராம். அதன்பிறகு அவரது நடிப்பு ஆவேசத்துக்கு செல்லும்போது, இன்னும் தன்னை கடுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முறுக்கு மீசை கெட்டப்பாம்.
அதனால், இதுவரை காமெடியாக, அல்லது சீரியசாக என படத்துக்குப்படம் மாறுபட்ட கதைகளில் நடித்த விஜயசேதுபதிக்கு இந்த படம் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்குமாம். இதுவரை ஆக்ஷன் பக்கம் திரும்பாமல் இருந்த விஜயசேதுபதி, இனி அவ்வப்போது ஆக்ஷன் அரிதாரம் பூசவும் திட்டமிட்டுள்ளாராம்.
No comments:
Post a Comment