மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா..!
முன்தினம் பார்த்தேனே, தடையறத் தாக்க படங்களை இயக்கிய மகிழ் திருமேனி டைரக்ட் செய்யும் அடுத்த படத்தில் ஆர்யா நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. நேமிசந்த் ஜெபக், ஹித்தேஸ் ஜெபக் தயாரிக்கிறார்கள். ஆக்ஷன் திரில்லர் கதை. பல மாதங்களுக்கு முன்பே கதையை கேட்ட ஆர்யா. அதற்கு ஓகே சொல்லாமல் இருந்தார். இப்போது ஓகே சொல்லியிருக்கிறார். ஹீரோயின் அனேகமாக நயன்தாராவாக இருக்கலாம். எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புறம்போக்கு படத்திற்கும், இந்தப் படத்திற்கும் ஒரே நேரத்தில் கால்ஷீட்டை பகிர்ந்து கொடுத்திருக்கிறார் ஆர்யா.
நவம்பரில் ஷூட்டிங் தொடங்குகிறது. இத்தாலி, ஸ்பெயின், லண்டனிலும் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிக்கிறார் என்று பல மாதங்களுக்கு முன்பே செய்தி வெளியானது அப்போது மகிழ்திருமேனி நான் ஆர்யாவை சந்தித்ததுகூட இல்லை என்று உடனே மறுப்பு கொடுத்ததும். மகிழ்திருமேனி யார் என்றே தெரியாது என்று ஆர்யா சொன்னதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment