Search This Blog

Monday, 2 September 2013

சினிமா உலகம் தான் பெண்களுக்கு பாதுகாப்பானது: காவ்யா ஷெட்டி சொல்கிறார்

சினிமா உலகம் தான் பெண்களுக்கு பாதுகாப்பானது: காவ்யா ஷெட்டி சொல்கிறார்

தொலைக்காட்சியில் சோப்பு, பேஸ்ட், மசாலா பாக்கெட்டுகளை வாங்கச் சொல்லிக் கொண்டிருந்த காவ்யா ஷெட்டி ஷிவானி படத்தின் மூலம் ஹீரோயினாகிவிட்டார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: விளம்பரங்களில் குடும்ப பெண்ணாக உங்களுக்கு அறிமுகமாகி இருக்கிறேன். நிஜத்தில் நான் படு கிளாமரான பொண்ணு, என் சினிமாவும் அப்படித்தான் இருக்கும். நான் தைரியமான பொண்ணு ஆனால் எனக்கு பேய் என்றால் பயம். ஷிவானி பேய்படம் அதிலும் படம் முழுக்க பேய்க்கு பயந்து ஓடிக்கொண்டே இருக்கிற கேரக்டர். வெளிசமூகத்தில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் பத்திரிகையாளருக்கே பாதுகாப்பு இல்லை. சினிமா உலகம்தான் பெண்களுக்கு பாதுகாப்பானது. தமிழில் பிடித்த நடிகர் ஆர்யா. அவருடன் நடிக்கும் வாய்ப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment