தனுஷின் பாலிவுட் நடிகை சென்டிமென்ட்!
ராஞ்சனா படத்துக்கு முன்புவரை தொடர்ச்சியாக தோல்வி படங்களாக கொடுத்து வந்த தனுசுக்கு பல படங்களுக்குப்பிறகு வெற்றியை கொடுத்த படம்தான் ராஞ்சனா. அதுவும் அவரது முதல் இந்தி படம் அது. இந்தியில் கால் வைக்கிறேன், இந்த படம் வெற்றி பெற்றால் எனது இந்தி சினிமா பயணமும் தொடரும் என்று சொல்லியபடியே நடித்தார் தனுஷ்.
ஆனால், அவரே எதிர்பார்க்காத அளவுக்கு படம் பெரிய வெற்றி பெற்று 100 கோடி வசூலித்து சாதனை புரிந்தது. அதனால் தனுஷின் இந்தி சினிமா பிரவேசத்துக்கு அந்த படம் நல்லதொரு பிள்ளையார் சுழி போட்டு வைத்தது. அதோடு, அப்படத்தில் நடித்த சோனம்கபூரும் தனுஷின் ராசியான நடிகை பட்டியலில் சேர்ந்தார்.
அதோடு, தனக்கு இந்தி நடிகை சென்டிமென்ட் ஒர்க்அவுட் ஆகிறது என்று அந்த படத்தில் தெரிந்து கொண்ட தனுஷ், இனி தான் நடிக்கிற படங்களில் இந்தி நடிகை இருக்க வேண்டும் என்று கருதினார். ஆனால், அந்த விருப்பம் அவரே தயாரித்து நடிக்கிற வேலையில்லா பட்டதாரி படத்தில் நிறைவேறவில்லை. அதில் அமலாபால் கமிட்டானார்.
ஆனால், இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன் படத்தில் நிறைவேறியிருக்கிறது. ஏற்கனவே இந்தியில் இசாக் என்ற படத்தில் நடித்த மாடல் அமிராவை புக் பண்ணியிருக்கிறார்கள். இதனால், இன்று முதல் புதுச்சேரியில் நடைபெறும் அனேகன் படப்பிடிப்பில் மிகுந்த உற்சாகத்துடன் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் தனுஷ்.
No comments:
Post a Comment