`10 ஆண்டுகளாவது நடிப்பேன்
நந்திதா நடித்த, அட்டக்கத்தி படம், நல்ல வரவேற்பை பெற்றும், அவரை அதிகமாக படங்களில் காண முடியவில்லை. இடையில்,எதிர்நீச்சல் என்ற படத்தில் மட்டும் தலையை காட்டினார். அதிலும், அந்த படத்தில், அவர் ஹீரோயின் இல்லை. ஏன் இந்த இடைவெளி என, அவரிடம் கேட்டால், கல கலவென சிரிக்கிறார். இன்றைய சினிமா உலகம், அவசரங்கள் நிறைநத உலகமாக மாறி விட்டது. தற்போது, ஒரு நடிகையால், ஐந்தாண்டுகளுக்கு மேல், ஹீரோயினாக நடிக்க முடியாது. அதனால் தான், படங்களை தேர்வு செய்து, அதில், என் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளதா என்பதை முடிவு செய்து, அதற்கு பின் தான், நடிக்க சம்மதிக்கிறேன். குறைந்தது. 10 ஆண்டுகளாவது, தமிழ் திரையுலகில் நிலைத்து நிற்க ஆசைப்படுகிறேன் என்கிறார்.
No comments:
Post a Comment