பாடலாசிரியர் சினேகனின் புதிய அவதாரம்!
கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா போன்ற பாடல்கள் மூலம் பாப்புலர் ஆனவர் பாடலாசிரியர் சினேகன், பங்காளி பா.விஜய் கழக தலைவரின் ஆசியோடு ஹீரோவாக நடிக்க தொடங்கியதைப் பார்த்து சினேகன் அம்மா கட்சி பக்கம் தாவினார். ஆனால் அங்கு இவரை பாடலாசிரியராக மட்டும்தான் பார்த்தார்கள். வேறு வழியில்லாமல் சொந்தமாக உயர்திரு 420 என்ற படத்தை தயாரித்து ஆன்டி ஹீரோவாக நடித்தார். அதுவும் பெரிதாக ஓடவில்லை. இருந்தாலும் சினேகனுக்கு நடிப்பு ஆசை விடவில்லை. அமீர் கொரியன் படத்தை காப்பி அடித்து எடுத்த யோகி படத்தில் வில்லனாக நடித்தார். அவர் நேரம் யோகியும் பிளாப் ஆனது. அதற்காக ஹீரோ ஆசையை விட முடியுமா? தொடர்ந்து வாய்ப்பு தேடியதில் களத்தில் வென்றான், கண்டதும் சுடு என்ற சிறு பட்ஜெட் படங்களில் வேடம் கிடைத்தது.
ஆனாலும் இதில் சினேகனுக்கு திருப்தி இல்லை. பா.விஜய்க்கு இளைஞன் படம் எடுக்க ஒரு லாட்டரி வியாபாரி மார்ட்டின் கிடைத்த மாதிரி தனக்கு ஒரு பெரிய புரட்யூசர் கிடைக்க வேண்டும் என்ற தேடியதில் இப்போது கிடைத்து விட்டதாக தெரிகிறது. இராஜராஜசோழனின் போர்வாள் என்ற படத்தை அறிவித்திருக்கிறார். இதில் மன்னன் ராஜராஜனின் படைத் தளபதியாக இருந்த ஒருவனின் கதையாம். அந்த தளபதியாக சினேகன் நடிக்கிறார். சினேகனுக்கு ஜோடி சினேகா (என்னே பொருத்தம்). இன்னொரு நாயகியாக ஸ்ரேயா நடிக்கிறார். படத்தின் துவக்க விழா கரூரில் பொதுமக்கள் முன்னிலையில் நடக்கிறது. அந்த விழாவில் படத்துக்கான ஒரு பாடலுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மெட்டுப்போடுகிறார் இளையராஜா. (ஒரு காலத்தில் மேடையில் பாடவே மாட்டேன் என்றவர் இளையராஜா) சினேகனின் ஹீரோ கனவை ராஜராஜசோழன் நிறைவேற்றி வைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment