Search This Blog

Saturday, 31 August 2013

எத்தனை ஹீரோயின் என்பது முக்கியமல்ல; கதை தான் முக்கியம் - நந்திதா!!

எத்தனை ஹீரோயின் என்பது முக்கியமல்ல; கதை தான் முக்கியம் - நந்திதா!!

அட்டகத்தி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நந்திதா. தொடர்ந்து எதிர்நீச்சல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பங்கேற்ற நந்திதாவிடம், அட்டக்கத்தி தொடங்கி தற்போது நடித்துள்ள இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என தொடர்ந்து இரண்டு ஹீரோயின்கள் உள்ள படங்களிலேயே நடிக்கிறீர்களே, உங்களுக்கு எப்படி அது செட்டாகிறது என கேட்டபோது, இரண்டு ஹீரோயின் அல்ல இன்னும் எத்தனை ஹீரோயின்கள் இருந்தாலும் எனக்கு கவலையில்லை. படத்தில் எனது ரோல் என்ன, கதை என்ன அதைமட்டுமே பார்த்து நடிக்கிறேன். மற்றபடி எத்தனை ஹீரோயின் இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து நடிப்பேன். இப்படத்தை தொடர்ந்து, விரைவில் நளனும் நந்தினியும் படம் வெளிவர இருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment