Search This Blog

Saturday, 31 August 2013

உயிருக்கு உயிராக படத்துக்கு யு சான்றிதழ்

உயிருக்கு உயிராக படத்துக்கு யு சான்றிதழ்

வேந்தர் புரொடக்சன்ஸ் வழங்கும் , மதர் லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பியின் உயிருக்கு உயிராக படம் விஜய மனோஜ்குமார் இயக்கத்தில் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.
பிரபு, ரங்க பாஷ்யம், சஞ்சீவ் , சரண் குமார் , நந்தனா, ப்ரீத்தி தாஸ் மற்றும் ஸ்ரீரஞ்சனி உட்பட பலர் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் சென்சார் அதிகாரிகளுக்கு போட்டு காட்டப்பட்டது. முழுக்க முழுக்க மாணவர்களின் திறமையையும், அவர்களின் காதல் எப்படிப்பட்டது என்பதையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்திற்கு அவர்கள் யு சான்றிதழ் வழங்கினார்கள்.
அதோடு, மாணவர்களின் கண்டுபிடிப்புகளாக இயக்குனர் காட்டியிருக்கும் சில அபூர்வமான விஷயங்கள் எங்களை ஆச்சர்யப்படுத்தியது. அதோடு காதலை அவர் மிகக் கௌரவமாக காட்டியிருப்பதாகவும் கூறி இயக்குனர் விஜய மனோஜ்குமாரை பாராட்டினார்கள்.

No comments:

Post a Comment