Search This Blog

Thursday, 12 September 2013

எனக்கு காமெடி வரல - மனிஷாவின் பீலிங்ஸ்

எனக்கு காமெடி வரல - மனிஷாவின் பீலிங்ஸ்

பட்டயகிளப்பு பாண்டியா படம் பட்டய கிளப்பும் காமெடி படம், ஆனால் அந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு காமெடியாக நடிக்க சரியாக வரவில்லை என்று கூறியுள்ளார் நடிகை மனிஷா யாதவ். இயக்குநர் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 படத்தில் நடித்தவர் நடிகை மனிஷா யாதவ். தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் படத்தின் மூலம் பேசப்படும் நடிகையாக மாறியிருக்கிறார். தற்போது ஜன்னல் ஓரம், பட்டய கிளப்பு பாண்டியா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதுகுறித்து மனிஷா கூறும்போது, ஜன்னல் ஓரம், பட்டய கிளப்பு பாண்டியா படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கிறது. இதில் பட்டய கிளப்பு பாண்டியா படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது. விதார்த் ஹீரோ. காமெடியில், விதார்த் அசத்தியிருக்கிறார். அவரோடு சூரியும் இணைந்து காமெடியில் பட்டய கிளப்பி இருக்கிறார். இவர்கள் சேர்ந்து நடிக்கும் போது அவர்கள் செய்த காமெடியை எண்ணி விழுந்து விழுந்து சிரித்தேன். அதேசமயம் நான் நடிக்கும் போது எனக்கு காமெடி சரியாக வரவில்லை என்றார். மேலும் இந்த படங்களுக்கு அடுத்து வெற்றிமாறனின் உதவியாளர் இயக்கும் படத்தில் அதர்வா ஜோடியாக நடிக்கி‌றேன். படத்திற்கு ஈட்டி என்று பெயர் வைத்துள்ளனர். விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பு வெளியாகும் என்றார்.

No comments:

Post a Comment