எனக்காக யாரும் வெயிட் பண்ணாதீங்க: விஜய்சேதுபதி
2015 டிசம்பர் வரைக்கும் விஜய் சேதுபதியின் கால்ஷீட் டைரி புல். கைவசம் 5 படங்கள். இப்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் தன் சம்பளத்தை ஒரே அளவாக (ஒன்று முதல் ஒன்றரை கோடி என்கிறார்கள்) வைத்துக் கொண்டிருக்கிறார். தன்னை தேடி வரும் கதைகள் நல்லதாக இருந்தால் தான் நடிக்க முடியாவிட்டாலும் மற்றவர்களுக்கு கொடுக்கிறார்.
இதுபற்றி விஜய் சேதுபதி கூறியதாவது: எத்தனை படங்கள் வந்தாலும் நம்மால நடிக்க முடியுற அளவுக்குத்தானே நடிக்க முடியும். பணம் கிடைக்குதுங்றதுக்காக வர்ற படத்தையெல்லாம் ஒத்துக்கிட்டு அப்புறம் அவுங்களை வருடக் கணக்கில் காக்க வைக்குறதுல என்ன நியாயம். சில பேரு வட்டிக்கு கடன் வாங்கிக்கூட படம் எடுக்க வருவாங்க. அப்புறம் அவுங்க வட்டி கட்டியே நொந்துடுவாங்க. அதனால நல்ல கதையா இருந்தா. இந்த கதைக்கு இந்த ஹீரோ பொருத்தமா இருப்பார்னு அவுங்கள அனுப்பி வச்சுடுறேன். அந்த ஹீரோகிட்டேயும். அண்ணே இந்தப் படத்துல நீங்க நடிச்சா நல்லா இருக்கும்னு சொல்லுறேன். அப்படி நான் சொன்ன சில படங்கள் இப்போ தயாரிப்புல இருக்கு. இன்னும் இரண்டு வருஷத்துக்கு என்கிட்ட கால்ஷீட் இல்லை. அதுக்கு பிறகு என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும். திடீர்னு பாசத்தோட கட்டிப்புடிச்சிக்கிட்ட மக்களுக்கு டக்குன்னு விலக்கி வைக்கவும் தெரியும். இதை நான் தெளிவா உணர்ந்திருக்கேன் என்கிறார்.
No comments:
Post a Comment