Search This Blog

Thursday, 12 September 2013

நினைத்தாலே இனிக்கும் டிரைய்லர் கமல் வெளியிடுகிறார்

நினைத்தாலே இனிக்கும் டிரைய்லர் கமல் வெளியிடுகிறார்

1980களில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான இன்னிசை சித்திரம் நினைத்தாலே இனிக்கும். ரஜினி, கமல், ஜெயப்பிரதா நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் எட்டு பாடல்கள். அத்தனையும் தேன்சொட்டும் பாடல்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு இசை ராஜாங்கத்தையே நடத்திய படம். சுஜாதாவின் கதை, வசனத்தில் கே.பாலச்சந்தர் திரைக்கதை அமைத்து டைரக்ட் செய்த படம். இந்த படத்தின் நெகட்டிவ் ரைட்ஸ் ராஜ் டிவியிடம் உள்ளது. இதுவரைக்கும் 100 முறையாவது ராஜ் டிவியில் ஒளிப்பரப்பாகி இருக்கும். தற்போது இந்தப் படத்தை ராஜ் டி.வி டிஜிட்டல் படுத்தி உள்ளது. சினிமாஸ்கோப்பாக மாற்றி கலர் கரெக்ஷன் செய்து இந்த மாத இறுதியில் பெரிய திரையில் வெளியிடுகிறது.

அதற்கு முன்னோட்டமாக வருகிற 13ந் தேதி படத்தின் டிரைய்லரை வெளியிடுகிறது. சத்யம் தியேட்டரில் நடக்கும் விழாவில் கமலஹாசன் டிரைய்லரை வெளியிடுகிறார். படத்தின் இயக்குனர் கே.பாலச்சந்தர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் தலைமை தாங்குகிறார். பெப்சி தலைவர் அமீர், இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாத இறுதியில் படம் ரிலீசாகிறது.

No comments:

Post a Comment