சினிமா 100 விழாவில் ஆடமாட்டோம்: தெலுங்கு நடிகர் சங்கம் அறிவிப்பு
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வருகிற 21ந் தேதி முதல் 24ந் தேதி வரை சென்னையில் நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முடித்து வைக்கிறார். தென்மாநில முதல்வர்கள், மற்றும் திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். இறுதிநாள் விழாவிலி இந்தி நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவில் தினமும் ஒரு மாநில திரைப்பட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த நிகழ்ச்சியில் நாங்கள் ஆட மாட்டோம் என்று தெலுங்கு நடிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுபற்றி தெலுங்கு நடிகர் சங்க பிரமுகர் ஒருவர்கூறியதாவது: தெலுங்கானா பிரச்னை காரணமாக எங்கள் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாநிலமே பதட்டமான சூழ்நிலையில் உள்ளது. மக்கள் பயத்திலும், பதட்டத்திலும் போராடிக் கொண்டிருக்கும்போது நாங்கள் மேடையில் ஆட்டம்போட முடியாது. மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டியது எங்கள் கடமை. இதுபோன்ற சந்தர்ப்பத்தில் நாங்கள் விலகி இருப்பதே நல்லது என்றார்.
No comments:
Post a Comment