போலீஸ் வேடத்தில் காஜல் அகர்வால்
தலைவா படத்தில் அமலா பால், போலீஸ் வேடத்தில் நடித்ததை அடுத்து,காஜல் அகர்வாலும், விஜய் நடிக்கும், ஜில்லா வில் போலீசாக நடிக்கிறார். அவர் கூறுகையில், ‘சினிமாவுக்கு வந்து பெரும்பாலும் ரொமாண்டிக் வேடங்களிலேயே அதிகமாக நடித்துள்ள எனக்கு, போலீஸ் மற்றும் ஆக் ஷன் வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது, நீண்ட கால கனவாக இருந்து வந்தது.அதனால், ஜில்லா படத்தில், என்னை முதன்முறையாக, போலீஸ் கெட்டப்பில் நடிக்க கேட்ட போது, அதிக உற்சாகத்துடன், நடிக்க சம்மதித்தேன் என்று கூறும்,காஜல், இப்படத்துக்காக முதன்முறையாக சண்டை காட்சியிலும் நடிக்கிறார். அதனால்,ஜில்லா படம் மூலம் போலீஸ், ஆக்ஷன் என, என் இரண்டு ஆசைகள் நிறைவேறியுள்ளது என்கிறார் காஜல்.
No comments:
Post a Comment