நித்யா மேனனின் திடீர் தயக்கம்
மென்மையான, காதல் காட்சிகளில் நடிக்கும் ஹீரோயின் என்ற இமேஜை உருவாக்கி வைத்துள்ள நித்யா மேனன், தற்போது,ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். டில்லி மருத்துவ கல்லூரி மாணவி, பாலியல் பலாத் கார சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில், பாலியல் பலாத்கார காட்சிஇருந்ததால்,இந்த கதையில் என் னால் நடிக்க முடியாது என்று தயங்கினார் நித்யா மேனன்.அதையடுத்து, இதை ஒரு கதையாக மட்டும் பார்க்காமல், ஒரு சமூக விழிப்புணர்வு படத்தில் நடிப்பது போல் நினைத்தால், எந்த சங்கடமும் ஏற்படாதுஎன, படக்குழுவினர் கூறி யதை அடுத்து, படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார், அவர். நித்யா கூறுகையில்,பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், இந்தப் படத்தை பார்த்தால், நிச்சயம் அதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட மாட்டார்கள். அந்த அளவுக்கு இப்படம் அவர்கள் மனதில் மாற்றத்தை உருவாக்கும் என்கிறார்.
No comments:
Post a Comment