Search This Blog

Friday, 6 September 2013

விஜய சேதுபதியின்முதல் நடனம்

விஜய சேதுபதியின்முதல் நடனம்

தென் மேற்கு பருவக்காற்று படம் துவங்கி, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும் என, பல படங்களில், நாயகனாக நடித்த விஜயசேதுபதி, இப்போது அரை டஜன் படங்கள் வரை கைவசம் வைத்துள்ளார். ஆனாலும், இதுவரை எந்த படத்திலுமே, அவர் நடனமாடியது இல்லையாம். ஒரு படத்திலாவது நடனமாடும் வாய்ப்பு கிடைக்காதா என,ஏங்கிய அவருக்கு, இப்போது,அந்த ஏக்கம் தீர்ந்துள்ளது.இதற்கு தானே ஆசைப்பட்டாய் பால குமாரா’ படத்தில், முதன் முறையாக ஒரு பாடலில் நடனமாடியுள்ளார். அவர் கூறுகையில், நடிப்பில் போதிய பயிற்சி பெற்ற போதும், நடனத்தில் சரியான பயிற்சி பெறவில்லை. இதுவரை நான் நடித்த படங்களில் டூயட் இடம் பெறாததால், நடனமும் தேவைப்படவில்லை. ஆனால், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடனமாட வேண்டு மென்று, டைரக்டர் சொன்னதும், முறையாக பயிற்சி எடுத்து ஆடினேன். அந்த பாடலை மட்டும் எட்டு நாட்கள் படமாக்கினர். நானும் குறை தெரியாத அளவுக்கு ஆடியுள்ளேன் என்கிறார்

No comments:

Post a Comment