Search This Blog

Tuesday, 24 September 2013

தனுஷின் டெடி பியர் பாடலுக்கு ஏகப்பட்ட வரவேற்பாம்!

தனுஷின் டெடி பியர் பாடலுக்கு ஏகப்பட்ட வரவேற்பாம்!

3 படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதி பாடினார் தனுஷ். ஆனால், அந்த பாடல் பட்டிதொட்டியெல்லாம் கலக்கு கலக்கென்று கலக்கியது. தமிழகம் மட்டுமின்றி, இந்தி சினிமா வட்டாரங்களிலும் பிரபலமாகி தனுஷின் புகழ் பரப்பியது. அதன்பிறகுதான் இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமே தனுசுக்கு ஏற்பட்டது.

அப்படி ஒரு பாடல் தனுஷின் தலையெழுத்தையே மாற்றிக்காட்டியதால், இப்போது நய்யாண்டி படத்தில் அவர் பாடியுள்ள டெடி பியர் பாடலுக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாம். பாடல் யூ-டியூப்பில் வெளியிட்டதைப் பார்த்த அவரது ரசிக கோடிகள் இந்த பாடலும் கொலவெறிக்கு இணையாக சிறப்பாக உள்ளது என்று தனுஷை புகழ்ந்து தள்ளி வருகிறார்களாம்.

அதனால் உற்சாகத்தில் இருக்கும் தனுஷ், தனது நடிப்பைப்போலவே பாடல்களை ரசிக்கவும் ஒரு வட்டம் இருப்பதால், இனி அவ்வப்போது ஒரு பாடலை பாடி விடுவது என்ற முடிவிலும் இருக்கிறாராம்.

No comments:

Post a Comment