திரிஷாவின் பெயரில் போலி ‘வெப்சைட்’
நடிகர்- நடிகைகளின் பெயரில், போலி வெப்சைட்கள் துவங்குவது சமீபகாலமாய் அதிகரித்துள்ளது. அப்படி போலியாக துவங்கப்பட்ட வெப்சைட்டுகள், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில், த்ரிஷா பெயரில் மட்டும், 80 வெப்சைட்கள் உள்ளதாம். ஆர்யா பெயரில், 63ம், சமந்தா பெயரில் 55ம், விஜய் பெயரில் 55ம், கமல் பெயரில் 45ம், ஸ்ருதி ஹாசன் பெயரில் 42ம், ஸ்ரேயா பெயரில் 40ம், ரஜினி பெயரில் 31ம், தனுஷ் பெயரில் 23 போலி வெப்சைட்கள் உள்ளனவாம். இதனால் தான், நடிகர்களுக்கு தெரியாமலேயே, அவர்களே கூறியதுபோல் தவறான செய்திகள் அதிகமாக பரவி வருகின்றன.
இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், ‘இதுபோன்ற போலி வெப்சைட்களால், தவறான தகவல்கள் வெளியாகி, தேவையில்லாத பிரச்னையும், தலைவலியும் ஏற்படுகிறது. எனவே, இதுபோன்ற வெப்சைட்டுகளை, உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்கிறார்.
No comments:
Post a Comment