Search This Blog

Saturday, 28 September 2013

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் சினிமா

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் சினிமா

நாட்டில் இப்போது பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் சட்டம் தகவல் அறியும் உரிமை சட்டம். ஆனால் இந்த சட்டத்தை ஒரு சிலர் மட்டுமே சரியாக பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களும் மிரட்டப்படுகிறார்கள், மக்களிடம் இந்த சட்டம் பற்றி விழிப்புணர்வு இல்லை. இதனை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. படத்தின் பெயர் அங்குசம். ஸ்கந்தா, ஜெய குஹா என்ற நியூபேஸ்கள் நடிக்கிறார்கள். மனுகண்ணன் என்பவர்தான் புரட்யூசர் கம் டைரக்டர்.

படம் பற்றி அவர் கூறியதாவது: திருச்சி மாவட்டம் பெரம்பலூரில் எனக்கு சீனிவாசன் என்ற ஒரு நண்பர் உண்டு. படித்த பட்டதாரியான அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி பல உண்மைகளை வெளியில் கொண்டு வந்திருக்கிறார். குறிப்பாக காவிரி மணல் கொள்ளை, தன் பகுதியில் குடியிருப்பாக மாற்றப்பட்ட குளங்கள் பற்றி அவர் கேட்ட தகவல்கள் அந்த மாவட்ட அரசியல்வாதிகளுக்கு ஷாக் அடித்தது. அவரை ரவுடிகளை விட்டு தாக்கினார்கள், பொய் வழக்கு போட்டார்கள். அதனையும் மீறி அவர் அந்தப் பணியை செய்து வருகிறார்.
அவரின் அனுபவத்தை திரைக்கதையாக்கி உருவாவதுதான் அங்குசம். எத்தனை பெரிய யானையாக இருந்தாலும் மனிதன் ஒரு சிறு அங்குசத்தை கொண்டு அதை அடக்குகிறான். அதேபோல யானைபோன்ற இந்த அரசாங்கத்தை மக்கள் அடக்க உதவும் அங்குசம்தான் தகவல் அறியும் உரிமை சட்டம். படம் ஓடுவதற்கு தேவையான அத்தனை விஷயங்களோடும் படத்தை எடுத்துக்கிட்டிருக்கோம் என்கிறார்.

No comments:

Post a Comment