ஹிரோயினியாக வளரும் சரண்யா மோகன்!!
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்த சரண்யா மோகன் யாரடி நீ மோகினி படத்தில் துருதுரு கேரக்டரில் நடித்ததன் மூலம் இங்கு பிரபலமானார். அதன் பிறகு வெண்ணிலா கபடி குழு படத்தில் ஹீரோயின் ஆனார். பஞ்சாமிர்தம் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். அந்த படங்கள் ஃபிளாப் ஆனதால் மீண்டும் தங்கச்சி பாப்பா கேரக்டருக்கே வந்தார்.
ஆறுமுகம், வேலாயுதம், ஈரம், ஒஸ்தி, ஜெயம் கொண்டான் படங்களில் ஹீரோவுக்கோ, ஹீரோயினுக்கோ தங்கச்சியாக நடித்தார். ரசிகர்கள் அவரை தங்கச்சியாகவே பார்த்து விட்டதால் ஹீரோயினாக ஏற்கவில்லை. இதனை உணர்ந்து கொண்ட சரண்யா சில காலம் தமிழில் நடிக்காமல் மலையாளப் படங்களில் நடித்து வந்தார். இப்போது கொஞ்சம் வயசும், உடம்பும் ஏறிவிட்டதால் மீண்டும் தமிழில் ஹீரோயினாக களம் இறங்கி விட்டார்.
காதலைத் தவிர வேறொன்றும் இல்லை, சுயம், கோலாகலம் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அடுத்தும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இனி தங்கை வேடங்களில் நடிப்பதில்லை என்றும் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்றும் உறுதியான முடிவை எடுத்துள்ளார்.
No comments:
Post a Comment