Search This Blog

Saturday, 28 September 2013

அரை நிர்வாண காட்சியில் ஹரிப்ரியா!

அரை நிர்வாண காட்சியில் ஹரிப்ரியா!

தமிழில் கனகவேல் காக்க, முரண் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஹரிப்பிரியா. கன்னடத்து நடிகையான இவர் அட்டகத்தி ரஞ்சித்துடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், தெலுங்கில் ஹரிப்ரியா நடித்த அப்பய் கிளாஸ் அம்மாயி மாஸ் என்ற படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளதாம். அதனால் நீண்டநாளைக்குப்பிறகு தான் நடித்த ஒரு படம் ஓடியதால் உற்சாகத்தை கொண்டாடி வரும் ஹரிப்ரியா, தனது தென்னிந்திய அபிமான ஹீரோக்கள் பலரையும் அழைத்து அப்படத்தை ஷோ போட்டுக்காட்டினாராம்.

அதைப்பார்த்த அவர்கள், ஹரிப்ரியாவினால் இப்படிகூட நடிக்க முடியுமா என்று ஆச்சர்யத்தில் வாயை பிளந்தார்களாம். அப்படி என்னதான் பெருசாக நடித்து விட்டார் ஹரிப்ரியா என்கிறீர்களா? அந்த படத்தில் அவருக்கு விலை மாது வேடமாம். இதுவரை எத்தனையோ நடிகைகள் விலைமாதுவாக நடித்திருந்தபோதும், படுக்கையறை காட்சிகளில் பட்டும் படாமலும்தான் நடித்திருப்பார்கள். ஆனால் ஹரிப்ரியாவோ, எந்தவித தயக்கமும் இன்றி அரை நிர்வாண காட்சிகளில் ஆண்களுடன் இணைந்து நடித்துள்ளாராம்.

இதுவரை அவரை ஆடை மூடிய ரோஜாவாக மட்டுமே பார்த்து வந்த ஹீரோக்கள் அவரது இந்த அலங்கோலமான காட்சிகளைப்பார்த்துதான் இவரா இப்படி? என்று வாயை பிளந்து நின்றார்களாம்.

No comments:

Post a Comment