பண்ணையாரும் பத்மினியும்: கவுரவ வேடத்தில் சினேகா
விஜய்சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் படம் பண்ணையாரும் பத்மினியும், அருண்குமார் என்பவர் டைரக்ட் செய்கிறார். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கிறார். ஜெயபிரகாஷ் பண்ணையாராகவும், துளசி அவரது மனைவியாகவும் நடிக்கிறார்கள். கிராமத்தில் உள்ள பண்ணையார் தனது பத்மினி கார் மீது வைத்திருக்கும் அன்பும், அதை மற்றவர்கள் பார்க்கும் கிண்டல் பார்வையும்தான் படத்தோட ஒன் லைன். இதன் தெலுங்கு உரிமையை நானி வாங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் சினேகாவும், அட்டக்கத்தி ஹீரோ தினேசும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள். அதனை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள்.
நமக்கு கிடைத்த தகவல்படி. ஊருக்குள் பத்மினி காரை வைத்துக் கொண்டு அலம்பல் பண்ணும் பண்ணையாரின் குடும்பத்துக்குள் வெளியூரிலிருந்து வரும் ஒரு ஜோடியாக சினேகாவும், தினேசும் நடிச்சிருக்காங்களாம். அதாவது பண்ணையாரின் மகள், மருமகனாகவோ அல்லது பண்ணையாரின் சொத்தில் பங்குகேட்டு வரும் பங்காளிகளாகவோ நடித்திருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment