Search This Blog

Tuesday, 24 September 2013

இயக்குனர் கனவு ஒருநாள் நனவாகும்! விஷால்

இயக்குனர் கனவு ஒருநாள் நனவாகும்! விஷால்

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பதுதான் விஷாலின் லட்சியமே. ஆனால், காலம் அவரை கதாநாயகனாக்கி விட்டது. சில ஆக்ஷன் படங்கள் அவரை முன்னணி ஹீரோவாக்கி விட்ட நிலையில், தற்போது விஷால் பிலிம் பேக்டரியை தொடங்கி தயாரிப்பாளராகியிருக்கிறார். இந்த நேரத்தில் அவரது திரையுலக நண்பர்கள், ‘ஹீரோ, புரொடியூசர் ஆகிட்டீங்க, இயக்குனராவது எப்போது’ என்று கேட்கிறார்களாம்.

அதற்கு விஷால் கூறுகையில், சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பதுதான் எனது ஆசையே. சொல்லப்போனால் எனது சினிமா கனவே அதுதான். ஆனால், ஹீரோவாகி விட்டதால், அதன்பிறகு அதுபற்றி யோசிக்கவே எனக்கு நேரமில்லை. ஆனால், நிறைய கதைகள் ரெடி பண்ணி வைத்திருக்கிறேன். அந்த கதைகளில் நான் நடிப்பதா? இல்லை வேறு நடிகர்களை வைத்து நான் இயக்குவதா? என்பது பற்றி முடிவெடுக்கவில்லை.

படம் இயக்குவதற்கான நேரம் வரும்போது அதுபற்றி முடிவெடுப்பேன். ஆக, எனது இயக்குனர் கனவு ஒருநாள் கண்டிப்பாக நனவாகும். அதற்கான நேரம் விரைவில் கைகூடி வரும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறாராம்.

No comments:

Post a Comment