Search This Blog

Monday, 23 September 2013

பார்ட்- 2 மோகம் மலையாள சினிமாவிலும் பரவுகிறது!

பார்ட்- 2 மோகம் மலையாள சினிமாவிலும் பரவுகிறது!

            சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை சில இயக்குனர்கள் படமாக்கி வருகிறார்கள். உதாரணத்துக்கு சிங்கம்-2. விஸ்வரூபம்-2, ஜெய்ஹிந்த்-2 என சில படங்களை சொல்லலாம். இதைப்பார்த்து இப்போது மலையாளத்திலும் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் சிலர் இறங்கியுள்ளனர்.

அதில் முதல் நடிகராக ப்ருதிவிராஜ் களமிறங்கியிருக்கிறார். இவர் நடித்த மும்பை போலீஸ் என்ற படம் கேரளாவில் வசூலில் சக்கைப்போடு போட்ட படம். அதனால் தான் ஏற்கனவே நடித்த படங்களில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் முதலில் நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம் ப்ருதிவிராஜ்.

தமிழில் சூர்யா நடித்த சிங்கம் படத்துக்கு இணையான ஆக்சன் கலந்த போலீஸ் சப்ஜெக்ட் என்பதால், சிங்கம்-2 வைப்போன்று டெக்னிக்கல் ரீதியாக மும்பை போலீஸ்-2 படத்தை பிரமாண்டப்படுத்த திட்டமிட்டுள்ளார்களாம். கிட்டத்தட்ட தமிழ்ப்படங்களுக்கு நிகரான பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கயிருப்பதால் மலையாளத்தில் படமாக்கப்பட்டாலும், டப் செய்து அதே நாளில் தமிழிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்

No comments:

Post a Comment