Search This Blog

Thursday, 6 June 2013

ஜெயம் ரவி Vs ஜெயம் ரவி

ஜெயம் ரவி Vs ஜெயம் ரவி

சமுத்திரக்கனியின் நிமிர்ந்து நில் படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. ஆதிபகவானில் குனிந்தவர் இந்தப் படத்தின் மூலம்தான் நிமிர்ந்து நின்றாக வேண்டும்.
ஜெயம் ரவி இதில் 48 வயது நடுத்தர வயது மனிதராகவும், 25 வயது இளைஞனாகவும் நடிக்கிறார். இளைஞனுக்கு ஜோடி அமலா பால். இந்த இரு கேரக்டர்களும் மோதிக் கொள்ளும் சண்டைக் காட்சி ஒன்று படத்தில் வருகிறது. இதனை சமீபத்தில் பெங்களூரு நெடுஞ்சாலையில் படமாக்கினார் சமுத்திரக்கனி.
இதுவரை தமிழ் சினிமாவில் இப்படியொரு சண்டைக் காட்சி வந்திருக்காது, அந்தளவு ஆக்ரோஷமாக படமாக்கியிருக்கிறோம் என்றார். சண்டையின் நீளமும் அதிகமாம்.
நிமிர்ந்து நில் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. தெலுங்கில் நடித்து வருகிறவர் நானி. ஹீரோயின் மட்டும் அதே அமலா பால். ஜெயம் ரவி வெர்சஸ் ஜெயம் ரவி சண்டை முடிந்ததும் அதே இடத்தில் நானி வெர்சஸ் நானி சண்டையை படமாக்கியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment