தமன்னாதான் வேண்டும் – அடம் பிடித்த இயக்குனர்
தமன்னாவின் இந்திப் படம் ஹிம்மத்வாலா யாரும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ப்ளாப்பானது. இத்தனைக்கும் கமர்ஷியல் இயக்குனர் சஜித் கான், அஜய்தேவ் கான் என பக்கா டீம்.
ஹிம்மாத்வாலா ப்ளாப் காரணமாக தமன்னாவுக்கு வாய்ப்பு தர விரும்பியவர்களும் முகத்தை திருப்பிக் கொண்டனர். ஆனால் தமன்னாதான் வேண்டும் என அடம் பிடித்து அவரை தனது அடுத்தப் படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார் ஒருவர். சஸ்பென்ஸ் எதற்கு. சஜித் கான்தான் அவர்.
ஹிம்மத்வாலாவுக்குப் பிறகு சயிப் அலிகானை வைத்து ஒரு படம் இயக்குகிறார் சஜித் கான். இதில் தமன்னாதான் ஹீரோயின். என்ன ஒரு சங்கடம் என்றால் தமன்னா தனி ஹீரோயின் கிடையாது. மூன்று பேர்களில் ஒருவர். மற்ற இருவர் ஈஷா குப்தா மற்றும் சோனல் சௌகான்.
தடக்கா வெற்றிக்குப் பிறகும் தெலுங்கில் வாய்ப்புகள் எதுவும் வராததால் இந்த மூன்றில் ஒன்று வேடத்தை சந்தோஷமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment